ஒருத்தி

ஒருத்தி (Oruththi) என்பது 2003 ஆம் ஆண்டு அம்சன் குமார் இயக்கிய இந்திய தமிழ் திரைப்படம் ஆகும்.

ஒருத்தி
இயக்கம்அம்சன் குமார்
இசைஎல். வைத்தியநாதன்
நடிப்புபூர்வஜா
பாரதிமணி
தாமஸ் ஓபர்
ராம் சரவணா
ஒளிப்பதிவுபி. எஸ். தர்மன்
படத்தொகுப்புஎஸ். சத்திஷ் மற்றும் ஜே. என். ஹரிஷா
வெளியீடு26 திசம்பர் 2003 (2003-12-26)
நாடுதமிழ்
மொழிஇந்தியா

இது 2003 ஆம் ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டு இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.[1][2] புதுச்சேரி அரசின் சிறப்பு விருதையும் வென்றது.[3]

சுருக்கம்

1884 இல் தென்னிந்தியாவின் கிராமப்புறத்தில் நடக்கும் கதையாக உள்ளது இது. இந்த படத்தின் கதை கி. ராஜநாராயணனின் கிடை என்ற கதையின் தழுவலாகும். செவனி என்ற தாழ்த்தபட்ட பெண்ணும் (பூர்வஜா) உயர்சாதி (நாயக்கர்) இளைஞனான எல்லப்பனும் (கணேஷ்) காதலிக்கிறார்கள். இதற்கிடையில் அவள் துணிச்சலாக ஆங்கில அதிகாரியிடம் (தாமஸ் ஓபர்) முறையிட்டு கொடுங்கோலனான சமீந்தாரிடமிருந்து முழு கிராமத்திற்கும் விடிவை பெற்றுத் தருகிறாள். கிராமவாசிகள் செவனிக்கு தங்கள் நன்றிக்கடனை செலுத்த விரும்புகிறார்கள். அவள் எல்லப்பனை திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிகின்றனர். தாழ்த்தபட்ட பெண்ணை உயர் சாதியைச் சேர்ந்தவனுக்கு திருமணம் செய்து வைப்பதை அவர்களால் நினைத்துப் பார்க்ககூட முடியவில்லை. எது ஒன்றும் மக்களின் செயல்களால் அல்லாமல், அவர்கள் பிறந்த சாதியினால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பது செவானிக்கு ஒரு அடியாக உள்ளது. ஆனால் செவனி திருமணத்திற்குக் குறைவான எதற்கும் உடன்படவில்லை. இதனால் அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அவள் அவளது சாதி, குடும்பம், மண் எல்லாவற்றையும் துறந்து வந்தால் , திருமணத்துக்கு ஒப்புவதாக பஞ்சாயத்து சொல்கிறது. இதை ஒப்புக்கொள்ளாத அவள் தன் சொந்த சாதியினருடனே இருப்பதாக முடிவு செய்கிறாள். கடைசி காட்சியில் அந்த பிரித்தானிய அதிகாரி பயன்படுத்திய , இறகு பேனாவை யாரோ விளையாட்டாக தூக்கி எறிகிறார்கள். அவள் அதை பாய்ந்து பிடிக்கும் காட்சியுடன் படம் முடிகிறது..

இந்தப் படம் சமூக பழக்கவழக்கங்களுக்கு சவால் விடுக்கும் ஒரு பெண்ணின் கதையாகும். மேலும் அவளது செயலால் அவள் பெண்களின் விடுதலைக்கான ஆரம்ப விதைகளை விதைக்கிறாள்.

நடிகர்கள்

  • பூர்வாஜா செவனியாக
  • கணேஷ் எல்லப்பனாக
  • ராஜு
  • பாலா சிங்
  • பாரதி மணி
  • தாமஸ் ஓபர்
  • ராம் சரவண

குழு

  • இயக்குனர்: அம்சன் குமார்
  • திரைக்கதை: அம்சன் குமார்
  • ஒளிப்பதிவு: பி. எஸ். தரன்
  • படத்தொகுப்பு: எஸ். சதீஷ் மற்றும் ஜே. என். ஹர்ஷா
  • கலை: ஏ. சி பிள்ளை
  • இசை: எல். வைத்தியநாதன்

வரவேற்பு

ஒருத்தி விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது, அனைத்து விமர்சகர்களும் இந்த படத்தை பாராட்டினர்.[4][5] எல். வைத்யநாதனின் இசையும் நேர்மறையான வரவேற்பைப் பெற்றது.[6]

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஒருத்தி&oldid=31581" இருந்து மீள்விக்கப்பட்டது