ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்

ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் என்பது குவெண்டின் டேரண்டினோ எழுதி இயக்கிய 2019 ஆண்டு வெளியான மர்ம குற்றவியல் திரைப்படம் ஆகும். இப்படமானது கொலம்பியா பிக்சர்ஸ், போனா பிலிம் குரூப், ஹெய்டே பிலிம்ஸ், விஷனா ரொமாண்டிகா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சோனி பிக்சர்சால் விநியோகிக்கப்பட்டது, இப்படமானது அமெரிக்கா மாற்றும் ஐக்கிய இராச்சிய கூட்டுத் தயாரிப்பில் உருவானது ஆகும். இப்படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, பிராட் பிட் , மார்கோட் ரொப்பி, எமிலி ஹிர்ஷ், மார்கரெட் குவாலி, திமோதி ஓலிஃபண்ட், ஆஸ்டின் பட்லர், டகோட்டா ஃபான்னிங், புரூஸ் டெர்ன், அல் பசீனோ ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படத்தின் கதையானது 1960 களில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடப்பதாக உள்ளது.

ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்
Once Upon a Time in Hollywood
இயக்கம்குவெண்டின் டேரண்டினோ
தயாரிப்பு
கதைகுவெண்டின் டேரண்டினோ
நடிப்பு
ஒளிப்பதிவுராபர்ட் ரிச்சர்ட்சன்
படத்தொகுப்புபிரெட் ரஸ்கின்[1]
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் ரிலீசிங்
வெளியீடுமே 21, 2019 (2019-05-21)(கான்)
சூலை 26, 2019 (ஐக்கிய அமெரிக்கா)
ஆகத்து 14, 2019 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடு
  • ஐக்கிய மாநிலங்கள்
  • ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$90 மில்லியன்[2]

ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தின் உலக வெளியீடானது 2019 மே 21 அன்று கான் திரைப்பட விழாவில் நடந்தது. அமெரிக்காவில் 2019 ஜூலை 26 அன்றும், 2019 ஆகஸ்ட் 14 அன்று ஐக்கிய இராச்சியத்திலும் திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்து விமர்சகர்கள் "ஒட்டுமொத்தமாக நேர்மறையான பார்வையை" வெளியிட்டுள்ளனர்.[3][4]

கதைச்சுருக்கம்

தொலைக்காட்சியில் நடித்தபடி ஹாலிவுட்டில நடிக்க வாய்ப்பு தேடிவருகிறார் டிகார்ரியோ. இவருடைய நண்பரும் திரைப்பட சண்டைக் கலைஞருமான பாரிட் பிட் உள்ளார். இந்நிலையில் டிகார்ரியோவின் பக்கத்து வீட்டில் வசித்துவருபவரும் அமெரிக்காவின் பிரபல நடிகையும் இயக்குநர் ரோமன் பொலன்கியின் மனைவியான ஷாரோன் டேட் இவருது வயிற்றில் வளரும் எட்டுமாத குழந்தை, வீட்டில் இருந்த இன்னும் நால்வருடன் 1969 ஆம் ஆண்டு ஒரு நள்ளிரவில் கொல்லப்படுகிறார். இதுபோன்று பல கொலைகள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இந்த தொலையாளிகள் அடையாளம் காணப்படுவதும் கொலைக் கும்பலுக்கு எதிரான போடாட்டத்தில் இணைபிரியா நண்பர்களில் ஒருவர் உயிரிழக்க நேர்கிறது.

மேற்கோள்கள்