ஏ. பாலசுப்பிரமணியம்

ஏ.பி. என்று தமிழகத் தொழிலாளர்களால் அழைக்கப்பட்ட ஏ.பாலசுப்ரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும், அக் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

அவருடைய தந்தை (இராமாயணத்தின் மீதான விமர்சனங்கள் - Critic on Ramayana ) என்ற புத்தகத்தை எழுதிய அமிர்தலிங்கம் .[2] வசதிமிக்க குடும்பத்தில் பிறந்த அவர், தனது வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு இடதுசாரி அரசியல் போராட்டத்திற்குத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டார்.திண்டுக்கல் தோல்பதனிடும் தொழிலாளர்களை அணிதிரட்டி அவர் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளார். மார்க்சியத்தின் ஒளியில் பல்வேறு நூல்களை எழுதியவர். தொழிலாளர்களை எழுச்சிகொள்ள செய்யும் பேச்சாளர். மதுரைச் சதிவழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டார் . 1962 இந்திய சீனப் போரின் போது சிறையில் அடைக்கப்பட்டார் .[3] இவரது வாழ்க்கை வரலாறு ஏ. பாலசுப்ரமணியம் வாழ்வும் வழியும் என்கிற தலைப்பில் என் .ராமகிருஷ்ணனால் எழுதப்பட்டுள்ளது .[4]

மேற்கோள்கள்

  1. "ஏ.பி.எனும் ஒளி விளக்கு! ::". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 5 செப்டம்பர் 2014. pp. 3. http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77857. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. கொளத்தூர் மணி. "அயோத்தியிலிருந்து ராமன் தெற்கே வந்தது ஏன்?". http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19745:2012-05-13-14-25-59&catid=1469:2012&Itemid=711. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2014. 
  3. [www.thehindu.com/news/national/tamil-nadu/a-treasure-trove-for-bibliophiles/article4949591.ece "A treasure trove for bibliophiles"]. The Hindu. www.thehindu.com/news/national/tamil-nadu/a-treasure-trove-for-bibliophiles/article4949591.ece. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2014. 
  4. "ஏ. பாலசுப்ரமணியம் வாழ்வும் வழியும்". http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=308244. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2014. [தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/index.php?title=ஏ._பாலசுப்பிரமணியம்&oldid=28102" இருந்து மீள்விக்கப்பட்டது