ஏ. திருநாவுக்கரசு
ஏ. திருநாவுக்கரசு (பிறப்பு: ஆகத்து 12 1927, தமிழக எழுத்தாளர், தேவகோட்டை எனுமிடத்தில் பிறந்து தற்போது, தியாகராய நகர் சென்னையில் வாழ்ந்துவரும் இவர் வானதி பதிப்பக உரிமையாளரும், 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிப்புத் தொழிலில் ஈடுபட்டு 7000க்கும் மேற்பட்ட தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட சாதனையாளரும், இலக்கிய ஆர்வலருமாவார்.
எழுதிய நூல்கள்
- நினைக்க நினைக்க
- சின்னத்தம்பியின் பெரிய உள்ளம்
- மகாத்மாவின் மணிமொழிகள்
- நால்வர் வாழ்வும் வாக்கும்
அத்துடன் தன் வரலாற்றை “வெற்றிப்படிகள்” எனும் பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்
- புத்தக வித்தகர்
- பதிப்புக் கலைமாமணி
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011