ஏ. சீ. ஏ. எம். புஹாரி
மௌலவி ஏ.சீ.ஏ.எம். புஹாரி (கபூரி) இலங்கை தெளிவளை களுபோவில டீ சில்வா வீதி, டீட்ஸான் எனுமிடத்தில் வாழ்ந்துவரும் இவர் தென்கிழக்கு ஊடகவியலாளரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தான முஸ்லிம் சேவையில் வரலாற்றில் ஓர் ஏடு நிகழ்ச்சியை நீண்ட காலம் நடத்தியதுடன் மணிமொழிகள், நூருல் இஸ்லாம், தத்துவ வித்துகள், இலக்கிய மஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தியவரும், இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றவருமாவார்.
எழுதிய நூல்கள்
- சிறகடிக்கும் புதிய வேர்கள்
- தென்கிழக்கு தவறவிட்ட திரவியம்
- மருத நிலமைந்தன்
- முரண்பாடுகளும் தெளிவுகளும்
- உலமாக்களே ஒன்றுபடுவோம்
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011