ஏலே (Aelay) 2021 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். ஹலிதா ஷமீம் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த மதுமதி பத்மநாதன் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஏலே
Aelay poster.jpg
Poster
வகைநகைச்சுவை நாடகம்
எழுத்துஹலிதா சமீம்
இயக்கம்ஹலிதா ஷமீம்
நடிப்புசமுத்திரக்கனி,
மணிகண்டன்,
மதுமதி பத்மநாதன்
இசைபாடல்கள்:
காபிட் வாசுகி
அருள்தேவ்
பின்னணி:
அருள்தேவ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எஸ். சசிகாந்த்
சக்கரவத்தி இராமச்சந்திரா
புஷ்கர்-காயத்திரி
ஒளிப்பதிவுதேனி ஈசுவர்
தொகுப்புரேமண்ட் டெரிக் கிராஸ்டா
ஹலிதா சமீம்
தயாரிப்பு நிறுவனங்கள்வை நொட் ஸ்டூடியோஸ்
ரிலையன்சு என்டர்டெயின்மென்ட்
வால்வாட்சர் பில்ம்சு
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்பெப்ரவரி 28, 2021 (2021-02-28)

இத்திரைப்படம் ஆரம்பத்தில் 20201 பெப்ரவரி 12 இல் திரையரங்குகளில் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதன் தயாரிப்பாளர்கள் இதனை விஜய் தொலைக்காட்சி மூலம் வெளியிட முடிவு செய்து, 2021 பெப்ரவரி 28 இல் தொலைக்காட்சித் திரைப்படமாக வெளியிட்டனர். பின்னர் 2021 மார்ச் 5 இல் உலகெங்கும் நெற்ஃபிளிக்சு மூலம் வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

தயாரிப்பு

படம் முழுவதும் பழனியில் தயாரிக்கப்பட்டது. 2019 மே 3 இல் ஆரம்பமான இதன் படப்படிப்பு,[2] 2019 சூலை 1 இல் நிறைவடைந்தது.[3]

பாடல்கள்

ஏலே
அல்பம்
காபர் வாசுகி, அருள்தேவ்
வெளியீடு1 பெப்ரவரி 2021
ஒலிப்பதிவு2020
இசைப் பாணிஒலிச்சுவடு
நீளம்15:03
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சொனி மியூசிக்
இசைத் தயாரிப்பாளர்காபர் வாசுகி
அருள்தேவ்

இத்திரைப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாடல் வரிகளை காபர் வாசுகி, ஹலிதா சமீம், எம். கே. கடல்வேந்தன், கே. சித்திரசேனன் ஆகியோர் எழுதியிருந்தனர். இதன் தொகுப்பு 2021 பெப்ரவரி 1 இல் வெளியிடப்பட்டது.[4]

Track listing
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஏலே"  அருள்தேவ் 2:14
2. "எட்டுத்திக்கும் ஊறும்"  எம். கே. கடல்வேந்தன் 2:02
3. "கூடுவிட்டு"  கே. சித்திரசேனன் 1:57
4. "மகராசா"  காபர் வாசுகி 2:10
5. "முத்துக்குட்டி சேட்டை"  அலெக்சாண்டர் பாபு 2:45
6. "சீவனுக்கே"  யோகி சேகர், ரோஜா ஆதித்தியா 3:55
மொத்த நீளம்:
15:03

வெளியீடு

இத்திரைப்படம் 2019 செப்டம்பரில் வெளியிட ஆரம்பத்தில் உத்தேசிக்கப்பட்டது, ஆனாலும், தயாரிப்புப் பணிகள் முழுமையடையாத நிலையிலும், பின்னர் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகவும் பின்போடப்பட்டது.[3] அதிகாரபூர்வமான முன்னோட்டம் 2021 சனவரி 21 இல் வெளியிடப்பட்டு, திரையரங்குகளில் 2021 பெப்ரவரி 12 இல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.[5]

ஆனாலும், திரையிடப்படுவதற்கு முதல் நாள், திரைகளில் திரையிடப்படும் முடிவை தயாரிப்பாளர்கள் மீளப்பெற்று, 2021 பெப்ரவரி 28 இல் விஜய் தொலைக்காட்சி மூலம் வெளியிடப்படுமென அறிவித்தனர்.[6] திரையரங்குகளின் உரிமையாளர்களும், வினியோகத்தவர்களும் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வை நொட் ஸ்டூடியோஸ் மீது தடை விதித்ததே இதன் காரணம் எனப் பின்னர் அறியப்பட்டது. வை நொட் நிறுவனம் தயாரித்த தனுசின் ஜகமே தந்திரம் (2021) திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டதால், அந்நிறுவனத்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வினியோக நிறுவனங்கள் மறுத்துள்ளன.[7] அத்துடன், திரையரங்குகளில் திரையிடப்பட்டு 30-நாட்களின் பின்னரே ஓடிடியில் வெளியிடலாம் எனவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.[7]

மேற்கோள்கள்

  1. "Samuthirakani's 'Aelay' to have a direct television premiere". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  2. "First look of director Halitha's neo-realistic comedy Aelay out". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  3. 3.0 3.1 "Samuthirakani's 'Aelay' shooting wrapped up – Times of India". The Times of India (in English). பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  4. Aelay (Original Motion Picture Soundtrack) – All Songs – Download or Listen Free – JioSaavn (in English), பார்க்கப்பட்ட நாள் 13 February 2021
  5. "Halitha Shameem's Aelay: Makers to reveal the most awaited film's trailer; See post". PINKVILLA (in English). Archived from the original on 26 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Halitha Shameem's 'Aelay' skips theatrical release, to have television premier". The News Minute (in English). 13 February 2021. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
  7. 7.0 7.1 "Aelay to release directly on OTT? Here's what we know". www.moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 13 February 2021.
"https://tamilar.wiki/index.php?title=ஏலே&oldid=31479" இருந்து மீள்விக்கப்பட்டது