ஏரெழுபது
ஏரெழுபது என்பது, வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் எருதுகளின் பயன்பாடு, வேளாண்மைச் செயற்பாடுகள், சோழ மண்ணின் சிறப்பு, வேளாளர்கள் சிறப்பு என்று பல்வேறு வகையான செய்திகளை இந்த நூல் கூறுகிறது.
நூலின் சிறப்புகள்
இந்நூல் வேளாண்மையின் அறுபத்தி ஒன்பது சிறப்புகள் பற்றிக் கூறுகிறது.
- உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு
- ஏர்விழாச் சிறப்பு
- அலப்படைவாள் சிறப்பு
- மேழிச் சிறப்பு
- ஊற்றாணிச் சிறப்பு
- நுகத்தின் சிறப்பு
- நுகத்துளைச் சிறப்பு
- நுகத்தாணியின் சிறப்பு
- பூட்டு கயிற்றின் சிறப்பு
- கயிற்றின் தொடைச் சிறப்பு
- கொழுவின் சிறப்பு
- கொழு ஆணியின் சிறப்பு
- நாற்றுமுடி, தாற்றுக்கோல் சிறப்பு
- உழும் எருதின் சிறப்பு
- எருதின் கழுத்துக்கறை சிறப்பு
- எருது பூட்டுதற் சிறப்பு
- ஏர் பூட்டலின் சிறப்பு
- ஏர் ஓட்டுதலின் சிறப்பு
- உழுவோனின் சிறப்பு
- உழவின் சிறப்பு
- உழுத சாலின் சிறப்பு
- மண்வெட்டியின் சிறப்பு
- வரப்பின் சிறப்பு
- எருவிடுதலின் சிறப்பு
- சேறாக்கலின் சிறப்பு
- பரம்படித்தலின் சிறப்பு
- வித்திடுதலின் சிறப்பு
- முளைத்திறனின் சிறப்பு
- நாற்றங்காலின் சிறப்பு
- நாற்று பறித்தலின் சிறப்பு
- முடி இடுதலின் சிறப்பு
- உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு
- நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு
- பாங்கான நடவின் சிறப்பு
- உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு
- சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு
- வேளாண்மை முதலாதலின் சிறப்பு
- பயிர் வளர்திறத்தின் சிறப்பு
- நாளும் நீரிறைத்தலின் சிறப்பு
- பாய்ச்சும் நீரின் சிறப்பு
- நிலம் திருத்தலின் சிறப்பு
- சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு
- பயிர் நட்டாரின் சிறப்பு
- நீர் பாய்ச்சுதலின் சிறப்பு
- களைநீக்கலின் சிறப்பு
- கருபிடித்தலின் சிறப்பு
- கதிர் முதிர்தலின் சிறப்பு
- கதிரின் பசிய நிறசிறப்பு
- கதிரின் தலைவளைவின் சிறப்பு
- விளைவு காத்தலின் சிறப்பு
- அறுவடை கொடையின் சிறப்பு
- அறு சூட்டின் சிறப்பு
- களம்செய்தலின் சிறப்பு
- போர் அடிவலியின் சிறப்பு
- அடிகோலின் சிறப்பு
- போர் சிறப்பு
- போர்க்களப் பாடலின் சிறப்பு
- இரப்பவரும் தோற்காச் சிறப்பு
- நாவலோ நாவல் என்பதன் சிறப்பு
- எருது மிதித்தலின் சிறப்பு
- நெற்பொலியின் சிறப்பு
- நெற்குவியலின் சிறப்பு
- நெற்கூடையின் சிறப்பு
- தூற்றுமுறத்தின் சிறப்பு
- பொலி கோலின் சிறப்பு
- நெற்கோட்டையின் சிறப்பு
- கல்மணிகளின் சிறப்பு
- வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு
- நன்மங்கல வாழ்த்து உள்ளிட்டவையாகும்.
ஏர் எழுபது
ஏர் எழுபது என்ற நூல் கம்பரால் எழுதப்பட்டது ஆகும். இதில் ஏர்த்தொழில் பற்றி 70 செய்யுட்கள் உள்ளது. இந்நூலுக்கு முன் `ஏர்த்தொழில்’ பற்றிய நூல் இல்லை. எனவே `ஏர்த்தொழில்’ குறித்து எழுந்த முதல் நூல் `ஏர் எழுபது’ ஆகும். இந்நூல் சடையப்ப வள்ளலின் முன்னிலையில் 12-ஆம் நூற்றாண்டில் கம்பரால் அரங்கேற்றப்பட்டது. உழவுத் தொழிலின் மேன்மை உழவர் பண்பாடு, உழவரின் சிறப்பு, உழவியல் முறைகள், உழவியல் குறிப்புகள், சமுதாய நிலை, கருவிகள் முதலியவற்றை விளக்கிக் கூறுவதால், இந்நூல் `பயன் இலக்கியத்தைச் சார்ந்தது ஆகும்.
செங்கோலை நடத்தும் கோல் ஏரடிக்கும் சிறுகோலே; ஏர் நடக்குமெனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்; உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே; மன்னன், மக்கள், கலை, பண்பாடு போன்றவை உழவுத்தொழிலைச் சார்ந்துள்ளது; ஏரில்லையெனில் போரில்லை; உழவரின் நாற்றுமுடியே மன்னரின் மணிமுடி; போரில் வெற்றி தோல்விகள் உண்டு, உழவரின் களத்தில் தோல்வி என்பதே கிடையாது; சிவனது கழுத்து கறையினும், எருத்தின் கழுத்துத் தழும்பே பெருஞ்சிறப்புடையது; ஞாயிறு, திங்களின் கதிர்கள் உயிர்களை வளர்ப்பதில்லை ஆனால் நெற்கதிர்களோ உயிரை வளர்க்கிறது; உணவால் பசி ஒழிந்தால் மொழி, அறிவு வளரும்; நாடு சிறப்பெய்தும் போன்ற கருத்துகள் `ஏர் எழுபதில்’ உள்ளன. [1]
இவற்றையும் பார்க்க
உசாத்துணைகள்
- ஏர் எழுபது (2009). வாழ்வியற் களஞ்சியம்.
- ↑ கந்தசாமி, இவ.செ (1974). ஏர் எழுபது – ஒரு திறனாய்வு. இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 106-111.