ஏக் தா டைகர்
ஏக் தா டைகர் (Ek Tha Tiger) என்பது 2012 ஆம் ஆண்டு இந்திய இந்தி- மொழியில் வெளிவந்த காதல் அதிரடி திரில்லர் படமாகும், கபீர் கான் இயக்கத்தில் வெளியான இந்தித் திரைப்படம் ஆகும். ஆதித்யா சோப்ரா தயாரித்தார். சல்மான் கான், கத்ரீனா கைப் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். ஆதித்யா சோப்ரா தயாரித்தார். 2012 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 15 ஆம் நாளில் வெளியானது. இதன் கதைக்களம், இந்திய, பாக்கிஸ்தான் உளவாளிகளை முதன்மைப்படுத்தி நகர்கிறது. 2012 ஆம் ஆண்டில் அதிக வசூலைக் கொண்ட இந்தியத் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஏக் தா டைகர் | |
---|---|
இயக்கம் | கபீர் கான் |
தயாரிப்பு | அதித்யா சோப்ரா |
நடிப்பு | சல்மான் கான் கத்ரீனா கைப் |
மொழி | இந்தி |
கதை
இந்த படம் டைகர் (சல்மான் கான்) என்ற இந்திய உளவாளியைப் பின்தொடர்கிறது, உளவுத் தகவல்கள் பாகிஸ்தானுக்கு கிடைக்கப்பதற்கு முன் அதை மீட்டெடுக்கும் பணியில் கான் ஈடுபட்டுள்ளார். ஆனால் இந்த பயணத்தின் போது அவர் பாகிஸ்தான் முகவரை காதலித்த பின்னர் இது ஓரங்கட்டப்படுகிறது.
விமரசனம்
அதன் சண்டைக் காட்சிகள், இசை, திரைக்கதை, நடிப்பு மற்றும் இயக்கம் ஆகியவற்றிற்காக இந்த திரைப்படம் பொதுவாக நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் கைஃப்பின் நடிப்பை விமர்சித்தது. அதன் வெளியீட்டின் போது ஏராளமான வசூல் சாதனைகளையும் படைத்தது.[1] உலகளவில் ₹ 320 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ள இது, 2012 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த இந்தியப் படமாக மாறியது, மேலும் அனைத்து காலத்திலும் அதிக வருமானம் ஈட்டிய 25 வது இந்திய திரைப்படமாகும் . இது ₹ 33.5 கோடியுடன் அதிக வருமானம் ஈட்டிய உள்நாட்டு சாதனையையும் படைத்தது, .[2] இந்த படம் ஆறு பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது பரிந்துரைகளைப் பெற்றது, அதில் ஐந்தினை வென்றது.
இதன் தொடர்ச்சியாக டைகர் ஜிந்தா ஹைஎன்ற தலைப்பில், டிசம்பர் 2017 22 அன்று வெளியானது [3]
நடிகர்கள்
- அவினாஷ் சிங்காக -சல்மான் கான்
- சோயா "ஜீ" - கத்ரீனா கைஃப்
- ரா முகவர் ஆர்யாவாக ரன்வீர் ஷோரே .
- இந்திய உளவுப் பிரிவுத் தலைவர் செனாயாக கிரிஷ் கர்னாட் .
- அன்வர் கிட்வாயாக ரோஷன் சேத்,
- ஐ.எஸ்.ஐ முகவர் கேப்டன் அப்ரராக கேவி சாஹல் .
- இமு பேபியாக இம்ரான் அன்சாரி .
தயாரிப்பு
அவர் முன்பு காபூல் எக்ஸ்பிரஸ் மற்றும் நியூயார்க் படங்களை இயக்கிய பிறகு கபீர் கான் மற்றும் யஷ் ராஜ் பிலிம்ஸ் இடையேயான மூன்றாவது தயாரிப்பாக ஏக் தா டைகர் இருக்கிறது. படத்தின் தயாரிப்பு விரிவானது; கதையானது பல தடவை மாற்றி எழுதப்பட்டது, மேலும் 2011 இல் தொடங்குவதற்கு முன்னர் தயாரிப்புப் பணி பல ஆண்டுகளாக தாமதமானது.[4] ஏக் தா டைகர் முதலில் இந்தியாவில் படமாக்கப்பட்டது, அதே போல் துருக்கி, அயர்லாந்து மற்றும் கியூபாவில் உள்ள பல இடங்களிலும் படமாக்கப்பட்டது, ஆரம்பத்தில் ஆகஸ்ட் 15, 2012 அன்று உலகளவில் வெளியிடப்படுவதற்கு முன்பு ஜூன் 2012 இல் வெளியிட திட்டமிடப்பட்டது.[5]
ஆரம்பத்தில்,இப்படத்தை கபீர் கான் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கதையை எழுதி முடித்த பின்னர், கபீர் சாருக்கானை அணுகினார். ஆரம்பத்தில் கதையை விரும்பினாலும், தேதி சிக்கல்கள் காரணமாக கான் இந்த திரைப்படத்தை ஏற்கவில்லை.[6] படத்தின் திரைக்கதை நவம்பர் 2010 க்குள் நிறைவடைந்தது, மீண்டும் பிப்ரவரி 2012 இல் மாற்றங்களுக்கு உட்பட்டது.[7]
மே 2011 இல், ஏக் தா டைகர் என்ற படத்தில் சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் இணைந்து பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாயின. இது காஷ் மற்றும் யாஷ் ராஜ் பிலிம்ஸ் உடனான முதல் முயற்சியாகவும், கைஃப் ஜோடியாக நான்காவது முறையாகவும் இருந்தது. படத்தைத் தொடங்குவதற்கு முன்பு, கான் தனது சகோதரர் சோஹைல் கான் ஷெர் கான் என்ற திட்டத்தை ஒத்திவைத்தார்.[8] இப்படத்திற்காக அவருக்கு ₹ 32 கோடி.கொடுக்கப்பட்டது கத்ரீனாவின் அதிரடி வகைப் படங்களில் இந்த படம் முதன்மையானது.[9]
ஒலிப்பதிவு
சஜித்-வாஜித் இசையமைத்த ஒரு பாடலைத் தவிர அனைத்து பாடல்களும் சோஹைல் சென் இசையமைத்துள்ளார். திரைப்பட ஒலிப்பதிவை ஜூலியஸ் பாக்கியம் மேற்கொண்டுள்ளார்.[10]
மேற்கோள்கள்
- ↑ "Ek Tha Tiger Movie Reviews". ReviewGang. http://www.reviewgang.com/movies/186-Ek-Tha-Tiger-movie-review.
- ↑ "Ek Tha Tiger Collects 10 Crore in Week Three". Boxofficeindia.com இம் மூலத்தில் இருந்து 10 September 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120910004543/http://www.boxofficeindia.com/boxnewsdetail.php?page=shownews&articleid=4869&nCat=.
- ↑ "Exclusive: It's official! Katrina Kaif opposite Salman Khan in 'Tiger Zinda Hai'". DNA India. http://www.dnaindia.com/entertainment/report-exclusive-it-s-official-katrina-kaif-opposite-salman-khan-in-tiger-zinda-hai-2254772. பார்த்த நாள்: 13 September 2016.
- ↑ Harshikaa Udasi (4 August 2012). "Arts / Cinema : Spy Story" இம் மூலத்தில் இருந்து 6 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120806183724/http://www.thehindu.com/arts/cinema/article3727454.ece.
- ↑ "Ek Tha Tiger – Box Office Mojo". Glamsham. http://www.boxofficemojo.com/movies/?id=ekthatiger.htm.{{|date=December 2016 |bot=InternetArchiveBot |fix-attempted=yes }}
- ↑ "YRF offers profit to Salman" இம் மூலத்தில் இருந்து 2013-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131020175634/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-28/news-interviews/28641659_1_salman-khan-kabir-khan-mega-project.
- ↑ Smitha (13 February 2012). "Salman Khan changes the script of Kabir Khan's Ek Tha Tiger". Oneindia.in இம் மூலத்தில் இருந்து 21 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021004506/http://entertainment.oneindia.in/bollywood/gupshup/2012/salman-khan-kabir-khan-ek-tha-tiger-script-130212.html.
- ↑ "Salman Khan Gets Caged For 'Ek Tha Tiger'". Sawf news. 16 July 2011 இம் மூலத்தில் இருந்து 18 July 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110718081627/http://www.sawfnews.com/Bollywood/67302.aspx.
- ↑ "Katrina Kaif: 'Ek Tha Tiger stunts were electrifying'". 5 March 2012. http://www.digitalspy.co.uk/bollywood/news/a369347/katrina-kaif-ek-tha-tiger-stunts-were-electrifying.html.
- ↑ Boxofficeindia.com (1 October 2011). "Sohail Sen Replaces Pritam". Boxofficeindia.com. http://www.Boxofficeindia.com.co.in/sohail-sen-replaces-pritam/.