எஸ். ஓ. கனகரத்தினம்

எஸ். ஓ. கனகரத்தினம்
S. O. Canagaratnam
மட்டக்களப்பு தெற்குத்
தொகுதிக்கான
இலங்கை அரசாங்க
சபை உறுப்பினர்
பதவியில்
1936–1938
தனிநபர் தகவல்
முழுப்பெயர் சின்னக்குட்டி
உடையார்
கனகரத்தினம்
பிறப்பு 1880
இறப்பு 05-1938
(அகவை 57–58)
பணி அரசுப் பணி
தேசியம் இலங்கைத் தமிழர்,
அறியப்படுவது அலசியல்வாதி


சின்னக்குட்டி உடையார் கனகரத்தினம் (Sinnakutty Odayar Canagaratnam, 1880 – மே 1938) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், இலங்கை அரசாங்க சபை உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

கனகரத்தினம் 1880 இல் இலங்கையின் தென்கிழக்கே காரைதீவு என்ற ஊரில் சின்னக்குட்டி உடையார் என்பவருக்குப் பிறந்தார்.[1] இவர் மட்டக்களப்பு புனித அன்ட்ரூசு ஆங்கிலப் பள்ளியில் கல்வி கற்றார்.[1]

கனகரத்தினம் ஜே. ஆபிரகாம் என்பவரின் மகளான முத்தம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர்[1] 1938 மே மாதத்தில் இவர் காலமானார்.[1][2]

பணி

கனகரத்தினம் இலங்கை எழுதுவினைஞர் சேவையில் இணைந்து பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான உதவி நிதியாளராகவும், அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான முதலியாராகவும் பணி உயர்வு பெற்றார்.[1] அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர்1936 அரசாங்க சபைத் தேர்தலில் மட்டக்களப்பு தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இலங்கை அரசாங்க சபைக்கு சென்றார்.[1][2][3]

தேர்தல் தகவல்

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவுகள்
1936 இலங்கை அரசாங்க சபைத் தேர்தல் மட்டக்களப்பு தெற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

எழுதிய நூல்கள்

  • Monograph of the Batticaloa District of the Eastern Province, Ceylon, 1921[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 எஸ். ஆறுமுகம் (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 28-29. http://noolaham.net/project/19/1810/1810.pdf. 
  2. 2.0 2.1 Rajasingham, K. T.. "Chapter 8: Pan Sinhalese board of ministers - A Sinhalese ploy". Sri Lanka: The Untold Story இம் மூலத்தில் இருந்து 2001-12-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20011224000734/http://www.atimes.com/ind-pak/CI29Df03.html. பார்த்த நாள்: 2017-02-08. 
  3. "Veeramunai's perpetual fear". தமிழ்நெட். 04-02-1998. http://www.tamilnet.com/art.html?catid=79&artid=7392. பார்த்த நாள்: 8-02-2017. 
"https://tamilar.wiki/index.php?title=எஸ்._ஓ._கனகரத்தினம்&oldid=2494" இருந்து மீள்விக்கப்பட்டது