எஸ். ஏ. உதயன்

எஸ். ஏ. உதயன் ஈழத்துப் புதின எழுத்தாளர். ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.

அறிமுகம்

இவரது இயற்பெயர் ஏ. ஜே. கே. துரம். இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

கலை இலக்கியப்பணி

கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர். நாவல் இலக்கியமே இவரை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மற்றும் ஒரு நடிகனாக, ஒப்பனைக் கலைஞனாக, நாடகத் தயாரிப்பாளனாக, நெறியாளனாக அரங்கியல் துறையின் பன்முக ஆளுமை கொண்டவராகவும் திகழ்கின்றார்.

வெளிவந்த நூல்கள்

  • லோமியா (நாவல்) - 2008, சாளரம் வெளியீடு, சென்னை.
  • தெம்மாடுகள் (நாவல்) - 2009, திருப்புமுனை வெளியீடு, மன்னார்,
  • வாசாப்பு (நாவல்) - 2010, திருமறைக் கலாமன்ற வெளியீடு, கொழும்பு.
  • சொடுதா - (நாவல்) - 2011, கலையருவி வெளியீடு, மன்னார்.
  • குண்டுசேர் - (சிறுகதைத் தொகுப்பு) - 2012

விருதுகள்

  • லேமியா - 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் இலக்கிய விருது, பவளசுந்தராம்பாள் தமிழியல் விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியவற்றைப் பெற்றது.
  • தெம்மாடுகள் - 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்தநூல் இலக்கிய விருது தமிழியல் விருது ஆகியவற்றைப் பெற்றது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._ஏ._உதயன்&oldid=2489" இருந்து மீள்விக்கப்பட்டது