எஸ். ஏ. அசோகன்

எஸ். ஏ. அசோகன் (S. A. Ashokan) ஒரு தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் பொதுவாக அசோகன் என்றறியப்படுகிறார்.[2] தமிழ்த் திரைப்படவுலகில் சிறந்த வில்லன் நடிகராக அறியப்பட்ட இவர் ஒரு குணசித்திர நடிகருமாவார்.

எஸ். ஏ. அசோகன்
S. A. Ashokan.jpg
பிறப்புஆண்டனி
திருச்சி, தமிழ்நாடு
இறப்பு(1982-11-19)நவம்பர் 19, 1982
சென்னை
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்புனித ஜோசப் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
பணிநடிகர்
அறியப்படுவதுவில்லன் மற்றும் துணைக் கதாபாத்திரம்
வாழ்க்கைத்
துணை
மேரி ஞானம் (இயற்பெயர்: சரஸ்வதி)
பிள்ளைகள்வின்சென்ட் அசோகன்[1]

இளமைப் பருவம்

திருச்சியில் பிறந்து வளர்ந்த இவரது இயற்பெயர் ஆன்டனி ஆகும். தனது சிறுவயது முதலே, மேடைநாடகங்களில் பங்கேற்பதிலும் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகளில் பங்கேற்பதிலும் ஆர்வம் காட்டினார். திருச்சியிலுள்ள புனித சூசையப்பர் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார்.[3]

தொழில் வாழ்க்கை

பட்டப்படிப்பு முடித்த பின்னர் இயக்குநர் டி. ஆர். ராமண்ணாவைச் சந்தித்தார். அவர் அசோகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். ராமண்ணாவின் விருப்பப்படி, ஆன்டனி என்ற தன் பெயரை அசோகன் என திரையுலகிற்காக மாற்றிக் கொண்டார். முதன்முதலில் ஔவையார் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். 1961 ஆம் ஆண்டில் வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னேறத் தொடங்கினார். இத் திரைப்படத்தில் ஆஷ் துரை வேடமேற்று நடித்திருந்தார். 1960 மற்றும் 1970 களில் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களிலேயே நடித்தாலும் பல குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் இவரது குரலின் தொனியும், வசனங்களை இவர் உச்சரித்த பாணியும் இவருக்கு நல்லபெயரைப் பெற்றுத்தந்தன.[3]

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்

  1. வல்லவனுக்கு வல்லவன்
  2. கர்ணன்
  3. உலகம் சுற்றும் வாலிபன்
  4. கந்தன் கருணை
  5. வீரத்திருமகன்
  6. ஆட்டுக்கார அலமேலு
  7. அடிமைப் பெண்
  8. அன்பே வா
  9. காஞ்சித் தலைவன்
  10. ராமன் தேடிய சீதை[3]

மறைவு

எஸ். ஏ. அசோகன் 1982 நவம்பர் 19 அன்று தனது 52ஆவது அகவையில் மாரடைப்பால் காலமானார். மூன்று ஆண்டுகளின் பின்னர் இவரது மனைவி மேரி ஞானம் (சரசுவதி) காலமானார். இவர்களின் இரண்டு மகன்களில் அமல்ராஜ் காலமாகிவிட்டார். மற்றையவர் வின்சென்ட் அசோகன் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._ஏ._அசோகன்&oldid=21564" இருந்து மீள்விக்கப்பட்டது