எஸ். எல். வி. மூர்த்தி

எஸ்.எல்.வி. மூர்த்தி (பிறப்பு: ஆகஸ்ட் 18 1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நாளிதழ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே, வெற்றிக்கு விரைந்திடு, சவாலே சமாளி போன்ற கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இவர் எழுதிய “தொழில் முனைவோர் கையேடு” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._எல்._வி._மூர்த்தி&oldid=27509" இருந்து மீள்விக்கப்பட்டது