எஸ். அர்சியா

எஸ். அர்ஷியா (பிறப்பு: ஏப்ரல் 14, 1959 இறப்பு: ஏப்ரல் 7,2018) ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை இசுமாயில்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சையத் உசேன் பாஷா. பொருளியல் முதுகலைப் பட்டதாரியான இவர் தராசு வார இதழில் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் புதிய காற்று எனும் இலக்கிய இதழுக்குப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். கணையாழி, செம்மலர், தாமரை போன்ற இதழ்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் இவர் ஆனந்த விகடன், குமுதம் கல்கி, அமுதசுரபி ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "ஏழரைப்பங்காளி வகையறா" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2010ஆம் ஆண்டுக்கான அழகிய நாயகி அம்மாள் விருதும் இந்தப்புதினத்துக்கு வழங்கப்பட்டது. இவரது இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி மதுரையின் சமகால அரசியலும் பெருவணிகமான ரியல் எஸ்டேட் தொழிலும் கைகோர்க்கும்புள்ளிப்பற்றிப் பேசும் முக்கிய நாவலாகும். அப்பாஸ்பாய்தோப்பு மதுரை வைகைதென்கரையில் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நாவல். கரும்பலகை நாவல் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சனைகளை பேசும் நல்லதொரு நாவலாகும்.

படைப்புகளின் பட்டியல்

புதினங்கள்

  • ஏழரைப் பங்காளி வகையறா
  • பொய்கைகரைப்பட்டி[1]
  • அப்பாஸ்பாய் தோப்பு
  • கரும்பலகை
  • அதிகாரம்
  • சொட்டாங்கல்
  • நவம்பர் 8, 2016

சிறுகதைத் தொகுப்புகள்

  • கபரஸ்தான் கதவு
  • மரணத்தில் மிதக்கும் சொற்கள்
  • மொழிபெயர்ப்புகள்

நிழலற்ற பெருவெளி

திப்பு சுல்தான்

பாலஸ்தீன்

மதுரை நாயக்கர் வரலாறு

பாலைவனப்பூ

கோமகட்டுமாரு

கட்டுரைகள்

சரித்திரப் பிழைகள்

ஆதாரம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._அர்சியா&oldid=3568" இருந்து மீள்விக்கப்பட்டது