எல்லாமே என் ராசாதான்

எல்லாமே என் ராசாதான் (Ellame En Rasathan) 1995 ஆம் ஆண்டு ராஜ்கிரண் இயக்கி, தயாரித்து மற்றும் நடித்து வெளியான தமிழ் திரைப்படம். இளையராஜாவின் இசையில் வெளியான இப்படம் வணிகரீதியில் வெற்றி பெற்ற திரைப்படம்.[1][2] இப்படம் 1996 ஆம் ஆண்டு தெலுங்கில் சொக்கடி பெல்லம் என்ற பெயரில் மோகன் பாபு, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மோனிகா பேடி நடிப்பில் மறுஆக்கம் செய்யப்பட்டது.

எல்லாமே என் ராசாதான்
இயக்கம்ராஜ்கிரண்
தயாரிப்புராஜ்கிரண்
கதைராஜ்கிரண் (வசனம்)
திரைக்கதைராஜ்கிரண்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎல். கேசவன்
ஆர். எம். குப்புராஜ்
கலையகம்ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்
வெளியீடுஏப்ரல் 14, 1995 (1995-04-14)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

சிங்கராசு (ராஜ்கிரண்) சிறுமியான தன் மகளுடன் தன் மனைவியைக் கொன்ற மூக்கையனைத் (சூரியன்) தேடி ஒரு கிராமத்திற்கு வருகிறான். அவனது மகள்தான் அந்தக் கொலையைக் கண்ணால் கண்ட சாட்சி. எனவே அந்த சிறுமியைக் கொல்ல அவர்களைப் பின்தொடர்ந்து வருகிறான் மூக்கையன். அந்தக் கிராமத்தின் தலைவர் மகள் சின்னராணி (ரூபா ஸ்ரீ) சிங்கராசுவை விரும்புகிறாள்.

சிங்கராசுவின் கடந்தகாலம்: சிங்கராசு அவன் சொந்த கிராமத்தின் தலைவர். நல்லவனாக இருந்தாலும் பொறுப்பற்றவனாக இருக்கிறான். அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் சிசுக்கொலையை செய்யத் தூண்டும் மூக்கையனால் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை கொல்லப்படுகிறது. இதற்கு ஆதரவாக இருக்கும் அருகிலுள்ள கிராமத்துத் தலைவர் அய்யாவைத் (விட்டல் ராவ்) தண்டிக்க அவள் மகள் ராணியைக் (சங்கீதா) கடத்திவந்து தன் வீட்டில் தங்க வைக்கிறான் சிங்கராசு. இதன்பிறகு அய்யா காவல் நிலையத்தில் புகாரளிப்பதால் மூக்கையன் கைது செய்யப்படுகிறான். சிங்கராசுவின் நற்குணத்தைப் புரிந்துகொண்டு அவனை காதலிக்கத் தொடங்கும் ராணி தன் வீட்டுக்குப் போக மறுக்கிறாள். ராணியைத் திருமணம் செய்துகொள்ளும் சின்ராசு பொறுப்பானவனாக மாறுகிறான். சிறையிலிருந்து விடுதலையாகி வரும் மூக்கையன் சிங்கராசுவைப் பழிவாங்க ராணியைக் கொல்கிறான்.

இதன்பின் சிங்கராசு மூக்கையனைத் தண்டித்தானா? சின்ன ராணியைத் திருமணம் செய்தானா? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் வாலி, புலமைப்பித்தன் மற்றும் பொன்னடியான்.[3][4]

வ.எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் காலநீளம்
1 அழகான மஞ்சப்புறா மனோ, எஸ். ஜானகி வாலி 5:03
2 எட்டணா இருந்தா வடிவேலு பொன்னடியான் 4:55
3 ஒரு சந்தனக் காற்று இளையராஜா , எஸ். ஜானகி வாலி 5:29
4 தூத்துக்குடி முத்து ஆஷா லேகா வாலி 5:07
5 வீணைக்கு வீணைக்குஞ்சு இளையராஜா புலமைப்பித்தன் 5:05

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எல்லாமே_என்_ராசாதான்&oldid=31326" இருந்து மீள்விக்கப்பட்டது