எருக்கலம்பிட்டி
எருக்கலம்பிட்டி (Erukkalampiddy) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய கரையோர நகரமாகும். மன்னார் தீவில் அமைந்துள்ள இந்த ஊரில் ஒரு தபால் கந்தோரும் மீன் சந்தையும் அமைந்துள்ளது. மன்னாரில் இலிருந்து வடமேற்கே ஏ14 பாதை எருக்கலம்பிட்டி ஊடாக செல்கிறது.
எருக்கலம்பிட்டி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°2′N 79°52′E / 9.033°N 79.867°ECoordinates: 9°2′N 79°52′E / 9.033°N 79.867°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | மன்னார் |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
கிட்டத்தட்ட 10,000 மக்கள் வசிக்கும் இப்பிரதேசம் 5 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ளதுடன், 100% முஸ்லிம்கள் வசிக்கின்றனர். தமிழ் இவர்களது முக்கிய மொழியாகும். இங்கு மிகப் பழைமையான காட்டு பாவா ஜும்மா மஸ்ஜித் அமைந்துள்ளது. ஆரம்பகாலத்தில் அரேபியர்கள் மற்றும் தென்னிந்திய முசுலிம்களின் தொடர்பு இக்கிராமத்திற்கு இருந்துள்ளதால் அவர்களின் வழித்தோன்றல்கள் எருக்கலம்பிட்டியானது அன்று தொடக்கம் இலங்கையின் அறியப்பட்ட ஒரு பிரதேசமாக இருந்து வந்திருக்கின்றது. அத்துடன் அக்காலத்தில் மார்க்க அறிஞர்களும், இறை நேசர்களும் இந்த ஊரிற்கு வந்து சென்றதுடன், கிராமத்தில் அவர்களது ஸியாரங்கள் (தர்காக்கள்) பல காணப்படுகின்றன.[1]
பல வளங்கள் கொண்ட எருக்கலம்பிட்டியில் வேளாண்மை, முத்துக் குளித்தல், சங்கு குளித்தல் உள்ளிட்ட பல தொழில்களை மக்கள் செய்து வருகின்றனர்.[2]
பாடசாலைகள்
- எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி
- எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி
மேற்கோள்கள்
- ↑ "மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் வரலாறும் பாரம்பரியமும்" இம் மூலத்தில் இருந்து 2014-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140907232028/http://lankamuslim.org/2010/11/15/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/.
- ↑ http://www.mannartown.ds.gov.lk[தொடர்பிழந்த இணைப்பு]