எம். மனோகரன்

எம். மனோகரன் (மனோகரன் மலையாளம், பிறப்பு: 1961) மலேசியா, சிலாங்கூர், கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு[1] கமுந்திங் தடுப்பு முகாமில் இருக்கும் போது, பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி வாகை சூடி மலேசிய அரசியலில் ஒரு பெரிய சாதனையைச் செய்தவர்.[2]

மாண்புமிகு
எம். மனோகரன்
M. Manoharan
马诺哈兰
மலேசியா சிலாங்கூர்
மாநில சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
8 மார்ச் 2008 – மே 2013
முன்னையவர்Ching Su Chen
தொகுதிகோத்தா ஆலாம் ஷா, கிள்ளான், சிலாங்கூர், மலேசியா
பெரும்பான்மை7,184
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 செப்டம்பர் 1961
மலேசியா சிலாங்கூர்
அரசியல் கட்சிமலேசியா மலேசியா
ஜனநாயக செயல் கட்சி
(ஜ.செ.க)
துணைவர்எஸ். புஷ்பநீலா
பிள்ளைகள்ஹரிஹரன்
சிவரஞ்சனி
கணேந்திரா
வாழிடம்(s)கிள்ளான்
சிலாங்கூர்
கல்விவணிகவியல்
மலாயா பல்கலைக்கழகம்
சட்டத்துறை
இங்கிலாந்து
வேலைமலேசியா வழக்கறிஞர்
இண்ட்ராப் செயல் திறனாளர்
அரசியல்வாதி

பொது

அவர் சிறையில் இருக்கும் போது, அவரின் தொகுதி மக்கள், அவருக்கு வாக்கு அளித்து தேர்தலில் வெற்றி பெறச் செய்தனர். அது மலேசியாவின் வரலாற்றுச் சுவடுகளில் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.[3]

மலேசிய இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடி வரும் இண்ட்ராப் அமைப்பின் சட்ட ஆலோசகர்.[4] இவர் சிறையில் இருக்கும் போது, இவருடைய வழக்கறிஞர் நிறுவனம் திவாலாகிவிடும் நிலை ஏற்பட்டது. அதைத் தவிர்க்க, ‘மனோகரனைக் காப்பாற்றுங்கள் நிதி’ உருவாக்கப்பட்டது. மலேசியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, பணம் திரட்டி அவருடைய நிறுவனத்தைக் காப்பாற்றி, மலேசியாவின் மூவின ஒற்றுமைக்கு அடையாளம் காட்டினர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._மனோகரன்&oldid=25011" இருந்து மீள்விக்கப்பட்டது