எம். துரைராஜ்
எம். துரைராஜ் (பிறப்பு: நவம்பர் 1, 1934) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவரும் மலேசியத் தகவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவருமாவார். தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகிலுள்ள தெம்மாப்பட்டு எனும் ஊரில் பிறந்த இவர் அப்பாவின் அழைப்பை ஏற்று 18 வயதில் சிங்கப்பூருக்குச் சென்றவர். பின்னர் மலேசியாவில் வசிக்கத் தொடங்கி விட்டார். 1963 ஆம் ஆண்டில் உலகிலேயே முதன்முதலில் மலேசியத் தொலைக்காட்சி தமிழ்ச் செய்தி ஒளிபரப்பைத் தொடங்கிய போது, அந்தச் செய்தியைத் தொகுத்து வழங்கிய பெருமை இவருக்குண்டு. [1]இவரது 'பாதைகளும் பயணங்களும்' எனும் 600 பக்க அநுபவ நூல் மலேசியாவிலும், தமிழகத்திலும், லண்டன் தமிழ்ச் சங்கத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலும் வெளியீடு கண்டுள்ளது. அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
எழுத்துத் துறை ஈடுபாடு
1950 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- 'நேரம் வந்துவிட்டது
- 'பாதைகளும் பயணங்களும்'
இதழியல் பணிகள்
- இவர் சிங்கப்பூரில் 'புது யுகம்' இதழின் ஆசிரியராகவும், 'நண்பன்' துணை ஆசிரியராகவும் இருந்தவர்.
- மலேசியாவின் 'தமிழ் நேசன்' பத்திரிகை துணை ஆசிரியராகவும், ஞாயிறு பதிப்பின் பொறுப்பாசிரியராகவும் இருந்தவர்.
- மலேசியத் தொலைக்காட்சி செய்திப்பிரிவின் பொறுப்பாசிரியராகவும், 14 வருடங்களாக தகவல் அமைச்சின் 'உதயம்' இதழ் ஆசிரியராகவும்
இருந்தவர்.
பரிசில்களும்: விருதுகளும்
- 'வெள்ளி விழா நாயகர்' விருது - மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கம்
- "திண்டுக்ககல் அமைதி அறக்கட்டளை" யின் சிறப்பு விருது
மேற்கோள்கள்
- ↑ சுகதேவ் எழுதிய இலக்கியவெளி எனும் நூலின் பக்கம் 156.