எம். ஜி. வல்லபன்

எம். ஜி. வல்லபன் (M. G. Vallaban) என்பவர் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கதை, திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர் திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிக்கை ஆசிரியர் என பன்முகம் கொண்டவர் ஆவார். கேரளாவில் பிறந்தவர் என்றாலும் இவர் தமிழில் எழுதினார். [1]

எம். ஜி. வல்லபன்
பிறப்புஎம். ஜி. வல்லபன்
பெரிஞ்ஞினம், திருச்சூர், கேரளம்,  இந்தியா
தொழில்பத்திரிக்கையாளர், திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், கவிஞர்
பாடலாசிரியர்
செயற்பட்ட ஆண்டுகள்1973 - 2003

வாழ்க்கைக் குறிப்பு

இவர் கேரளத்தின் திருச்சூர் பகுதியில் பெரிஞ்ஞினம் என்ற ஊரில் பிறந்தவர். வல்லபனின் பள்ளிப் பருவத்தில் குடும்பம் சென்னை வந்தது. பள்ளிப் படிப்பு மலையாள வழியிலும் தமிழ் வழியிலும் கழிந்தது, என்றாலும் தமிழில் கவிதைகளும் பாடலும் எழுதும் அளவுக்கு ஆற்றலை வளர்த்துக் கொண்டார். இயக்குநர் ஆர்.செல்வராஜ் இயக்கிய பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் 'சோலைக்குயிலே காலைக்கதிரே' பாடல் மூலம் பாடலாசிரியராக வல்லபனை அவர் அறிமுகப்படுத்தினார். இளையராஜா இசையில் அப்பாடலைப் பாடிய எஸ். பி. சைலஜாவுக்கும் அதுவே முதல் பாடல். அது பிரமாதமான வெற்றி பெற்றது. அதன் பிறகு இளையராஜாவின் இசையிலும், வேறு சிலரின் இசையிலும் பல பாடல்களை எழுதினார்.[2]

மணிரத்னம் இயக்கிய படம் உள்பட 18 படங்களுக்கு வல்லபன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். தைப்பொங்கல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இவர் பல மாத இதழ்களை நடத்திய பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

எழுதிய புகழ்பெற்ற பாடல்கள் சில

  • மீன்கொடி தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் (கரும்புவில்)
  • தீர்த்தக் கரைதனிலே (தைப்பொங்கல்)
  • ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி (தர்மயுத்தம்)
  • என்னோடு பாட்டுப் பாடுங்கள்
  • மெல்ல மெல்ல என்னைத் தொட்டு
  • பூமேலே வீசும் பூங்காற்றே
  • நாலு வகை பூவில் மலர்க்கோட்டை
  • கண்மலர்களின் அழைப்பிதழ்
  • இசைக்கவோ நம் கல்யாணராகம்
  • தென்றலோ தீயோ.
  • தென்றிலிடை தோரணங்கள் (ஈரவிழிக் காவியங்கள்)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._ஜி._வல்லபன்&oldid=20823" இருந்து மீள்விக்கப்பட்டது