எம். ஜி. ஆர். நகரில் (திரைப்படம்)
எம். ஜி. ஆர். நகரில் (MGR Nagaril) என்பது செப்டம்பர் 12, 1991 அன்று வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஆனந்த் பாபு, சுகன்யா, விவேக், சார்லி, பாண்டியன், முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை அல்பி அசரப் இயக்கி, சித்திக் இலால் மற்றும் கோகுல கிருஷ்ணா (வசனம்) ஆகியோர் எழுதி, ஆர். பி. சௌத்ரியால் தயாரிக்கப்பட்டது. எஸ். பாலகிருஷ்ணன் இசையமைப்பு, ஜோசப் மற்றும் வி. சேகரின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 12, 1991 அன்று வெளியானது.[1][2][3]
எம். ஜி. ஆர். நகரில் | |
---|---|
இயக்கம் | அல்பி அசரப் |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | சித்திக் இலால் கோகுல கிருஷ்ணா (வசனம்) |
இசை | எஸ். பாலகிருஷ்ணன் |
நடிப்பு | ஆனந்த் பாபு சுகன்யா விவேக் |
ஒளிப்பதிவு | ஜோசப் வி. சேகர் |
படத்தொகுப்பு | வி. சேகர் |
கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
விநியோகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
வெளியீடு | 12 செப்டம்பர் 1991 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வரலாறு
இத்திரைப்படமானது 1990 ஆம் ஆண்டில் வெளியான மலையாள மொழித் திரைப்படமான இன் ஹரிஹர் நகர் படத்தின் மறு தயாரிப்புப் படமாகும்.
நடிகர்கள்
- ஆனந்த் பாபு - மகாதேவன்
- சுகன்யா - சோபனா
- விவேக் - கோபால்
- சார்லி - ஆனந்த்
- பாண்டியன் - சிவா
- நெப்போலியன் - ஜான் பீட்டர்
- சுமித்ரா - சிவாவின் அம்மா
- எஸ். எஸ். சந்திரன்
மேற்கோள்கள்
- ↑ Pradeep, K. (18 June 2015). "Recalling a musical legacy". தி இந்து இம் மூலத்தில் இருந்து 29 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210729105114/https://www.thehindu.com/features/friday-review/recalling-a-musical-legacy/article7328966.ece.
- ↑ "M.G.R Nagaril". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 12 September 1991. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19910912&printsec=frontpage&hl=en.
- ↑ "M G R Nagaril" இம் மூலத்தில் இருந்து 28 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220228113550/https://gaana.com/album/m-g-r-nagaril.