எம். சேனாதிபதி
எம்.சேனாதிபதி என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் நடிகர் சிவக்குமாரின் ஓவியக் கல்லூரி தோழரும் ஆவார். இவர் லலித் கலா அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தவர். இவர் சென்னை சோழமண்டலம் ஒவிய கிராமத்தின் தலைவராவார். [1] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர்.
வாழ்க்கை வரலாறு
இவர் 1939 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். [2] 1965 ஆம் ஆண்டில் சென்னை அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் வரைதல் மற்றும் ஓவியம் குறித்த பட்டம் பெற்றார். 1959 முதல் 1965 வரை நடிகர் சிவக்குமாரும் இவருடன் சேர்ந்து ஓவியக்கல்லூரியில் பயின்றார். [2] இவருடைய திருமணம் 1965-ல் ஓவியக்கல்லூரி படிப்பு முடியும் முன்பாகவே ஏப்ரல் 19-ம் தேதி சைதாப்பேட்டையில் நடைப்பெற்றது. இவர் ஈஞ்சம்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோழமண்டலம் எனும் பகுதியில் வசித்தார். இவருக்கு சரவணன் என்ற மகனும், ஹேமலதா என்று மகளும் உள்ளனர். இருவரும் ஓவியங்கள். [2]
உலக ஓவியக்கலை ஆய்வு
1988 ஆம் ஆண்டு முதல் லண்டன், பிரான்ஸ், ஹாலந்து, பெல்ஜியம் மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்ல பிரிட்டிஷ் கவுன்சில் மானியம் தந்தது. அந்நாடுகளின் கலாச்சாரம், ஓவிய பண்பாடு ஆகிய ஆய்வை மேற்கொண்டார். 2006-லிருந்து 2016-க்குள் சீனா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், அபுதாபி என பல நாடுகளுக்கும் சென்று அந்த நாட்டின் ஓவியக்கலை வளர்ச்சியை அறிந்துள்ளார்.
கண்காட்சி
பல ஓவியக் கண்காட்சிகளை சென்னை, பெங்களூரு, பம்பாய், கொல்கத்தா போன்ற நகரங்களில் பல முறை நடத்தியுள்ளார். 1987-1988 மற்றும் 1995 இல் லலித் கலா அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தவர். [2] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். [2]
சேனதிபதி இந்தியக் கடவுள்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஓவியங்களுக்காக அறியப்படுகிறார். இந்திய தொன்மவியல் சார்ந்த பாடங்களை கலைவடிவாக எடுப்பதில் வல்லராக இருந்தார்.
விருதுகள்
- 1988 பிரிட்டிஷ் கவுன்சில் கிராண்ட்
- 1984-88 சீனியர் பெல்லோஷிப், கலாச்சாரத் துறை, இந்திய அரசு, புது தில்லி
- 1981 ஆண்டு கண்காட்சி விருது.
- 1981 - தமிழ்நாடு ஓவியம் நுண்கலை குரு விருது, சென்னை தமிழ்நாடு லலித் கலா அகாடமி.