எம். கோபாலகிருஷ்ணன்

எம்.கோபாலகிருஷ்ணன் தமிழில் சிறுகதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். காப்பீட்டுத்துறையில் பணியாற்றி வருகிறார். கோவையில் வசிக்கிறார்.

எம். கோபாலகிருஷ்ணன்
எம். கோபாலகிருஷ்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எம். கோபாலகிருஷ்ணன்
அறியப்படுவது எழுத்தாளர்
வகை சிறுகதை, புதினம், குறுநாவல்

தனிவாழ்க்கை

எம்.கோபாலகிருஷ்ணன் திருப்பூர் நெசவாளர் காலனியில் பிறந்தவர்.உள்ளூர் ஆரம்பப் பள்ளி, திருப்பூர் ஆண்டகை மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படித்தார். சிக்கண்ணா கலைக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்தார். இந்தி இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர். கோவையில் வசிக்கிறார். காப்பீட்டுத்துறை அதிகாரியாக பணிபுரிகிறார்.[1]

படைப்புக்கள்

எம்.கோபாலகிருஷ்ணன் சூத்ரதாரி என்னும் பெயரில் சிற்றிதழ் ஒன்றை கல்லூரிக்காலத்தில் நடத்தினார். அதன்பின் அப்பெயரிலேயே மனஓசை போன்ற இதழ்களில் எழுத ஆரம்பித்தார். இவருடைய முதல் கவிதைத் தொகுதி சூத்ரதாரி என்ற பெயரில் வெளியாகியது. அதன்பின் எம்.கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

எழுத்தாளர் ஜெயமோகனுடன் இணைந்து ’சொல் புதிது’ என்னும் சிற்றிதழை நடத்தினார். இலக்கிய உரையாடல்களை ஒருங்கமைத்திருக்கிறார்

நாவல்கள்

  • அம்மன் நெசவு[2]
  • மணற்கடிகை
  • மனைமாட்சி
  • தீர்த்த யாத்திரை

சிறுகதைத் தொகுதிகள்

  • பிறிதொரு நதிக்கரை
  • முனிமேடு
  • சக்தியோகம்
  • மல்லி

குறுநாவல் தொகுதிகள்

  • வால்வெள்ளி
  • மாயப் புன்னகை

கட்டுரைத் தொகுப்பு

  • நினைவில் நின்ற கவிதைகள் (2018)- சிறுவாணி வாசகர் மையம்[3]
  • மொழி பூக்கும் நிலம் (2019)-தமிழினி
  • ஒரு கூடைத் தாழம்பூ (2019)-தமிழினி

மொழியாக்கம்

  • காதலின் துயரம் [கதே]
  • ஆண்டன் செகோவ் சிறுகதைகள்
  • அறிவு [ நாராயணகுரு]
  • ஈஸோவாஸ்ய உபநிடதம் உரை [நித்ய சைதன்ய யதி]
  • ஒரு அடிமையின் வரலாறு – வாழ்க்கைச் சரிதம் – பிரடெரிக் டக்ளஸ் (2001)
  • சிவப்புத் தகரக் கூரை – நாவல் – நிர்மல்வர்மா ( 2013 )
  • துயர்நடுவே வாழ்வு ( திகார் பெண்களின் கவிதைகள் ) (2015)
  • வால்காவிலிருந்து கங்கை வரை [ராகுல சாங்கிருத்தியாயன்]

இணையாக்கங்கள்

  • இலக்கிய உரையாடல்கள் ( ஜெயமோகனுடன் இணைந்து கண்ட நேர்காணல்கள் ) – (2006)
  • வீட்டின் மிக அருகே மிகப் பெரும் நீர்ப்பரப்பு ( செங்கதிர் தொகுத்த ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு ) – (2014)

விருதுகள்

  • கதா விருது - 1999[4]
  • தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது - 2001[சான்று தேவை]
  • சிறந்த நாவலுக்கான தஞ்சை பிரகாஷ் விருது - 2018[5]

வெளியிணைப்பு

எம். கோபாலகிருஷ்ணன் இணையதளம்

மேற்கோள்கள்

  1. "கதைக்குத் தக்க வடிவமே சிறப்பு!- எழுத்தாளர் சூத்ரதாரி (எ) எம்.கோபாலகிருஷ்ணன்". https://www.hindutamil.in/news/tamilnadu/507383-writer-gopalakrishnan-3.html/. பார்த்த நாள்: 21 December 2021. 
  2. "விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்". https://vishnupuramvattam.in/content/6925. பார்த்த நாள்: 21 December 2021. 
  3. ""நினைவில் நின்ற கவிதைகள்"- எம்.கோபாலகிருஷ்ணன் பேட்டி". http://siruvanivasagarmaiyam.blogspot.com/2019/01/blog-post.html. பார்த்த நாள்: 21 December 2021. 
  4. "கதைக்குத் தக்க வடிவமே சிறப்பு!- எழுத்தாளர் சூத்ரதாரி (எ) எம்.கோபாலகிருஷ்ணன்". https://www.hindutamil.in/news/tamilnadu/507383-writer-gopalakrishnan-3.html/. பார்த்த நாள்: 21 December 2021. 
  5. "திருப்பூரில் இன்று பழைய முதலாளிகளும் இல்லை பழைய தொழிலாளிகளும் இல்லை பழைய திருப்பூரும் இல்லை! – எம்.கோபாலகிருஷ்ணன் பேட்டி". https://saabakkaadu.wordpress.com/2018/12/02/m-gopalakrishnan-interview/. பார்த்த நாள்: 21 December 2021. 
"https://tamilar.wiki/index.php?title=எம்._கோபாலகிருஷ்ணன்&oldid=3536" இருந்து மீள்விக்கப்பட்டது