எம். கேவியஸ்

எம். கேவியஸ் (ஆங்கிலம்; மலாய்: M. Kayveas) (பிறப்பு: 29 ஏப்ரல் 1954) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மலேசியா எயர்லைன்சு வானூர்தி நிறுவனத்தின் வானோடி; மக்கள் முற்போக்கு கட்சியின் முன்னாள் தலைவர்; முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டத்தோ ஸ்ரீ லியோவ் தியோங் லாய் (Datuk Seri Liow Tiong Lai) என்பவரின் சிறப்பு ஆலோசகர்; மலேசியப் பிரதமர் துறையின் துணை அமைச்சர் ஆவார்.

மாண்புமிகு துவான்
டான் ஸ்ரீ, டத்தோ ஸ்ரீ டாக்டர்

எம். கேவியஸ்
YB M. Kayveas

PSM PJN JP
Tan Sri M Kayveas.jpg
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டுத் துறை
துணை அமைச்சர்
தைப்பிங் மக்களவைத் தொகுதி
பதவியில்
21 மார்ச் 2004 – 8 மார்ச் 2008
முன்னவர் கெர்க் சூ திங்
(Kerk Choo Ting)
(பாரிசான்கெராக்கான்)
பின்வந்தவர் நிகா கோர் மிங்
(Nga Kor Ming)
பாக்காத்தான் ராக்யாட்ஜனநாயக செயல் கட்சி
பெரும்பான்மை 2,172 (2004)
மக்கள் முற்போக்கு கட்சியின் தலைவர்
பதவியில்
1993–2018
முன்னவர் எஸ்.ஐ. இராஜா
பின்வந்தவர் மெக்லின் டென்னிஸ் டி குருஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு 29 ஏப்ரல் 1954 (1954-04-29) (அகவை 70)
பெந்தா தோட்டம், கோலா லிப்பிஸ், பகாங், மலாயா கூட்டமைப்பு
(தற்போது மலேசியா)
குடியுரிமை மலேசியர்
அரசியல் கட்சி மக்கள் முற்போக்கு கட்சி
பிற அரசியல்
சார்புகள்
பாரிசான் நேசனல் (2018 வரையில்)
வாழ்க்கை துணைவர்(கள்) பிளான்சே ஓல்பெரி
(Blanche Olbery)
பிள்ளைகள் மார்செலா கேவியஸ், யசீனா கேவியஸ், மைக்ரல் கேவியஸ், மைக்ரயன் கேவியஸ்
இருப்பிடம் கோலாலம்பூர்
படித்த கல்வி நிறுவனங்கள் பக்கிங்காம் பல்கலைக்கழகம், இங்கிலாந்து
பணி அரசியல்வாதி, வானோடி
இணையம் www.kayveas.com

2008 மலேசியப் பொதுத் தேர்தலில் தோற்கும் வரையில் இவர் தைப்பிங் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். முன்னதாக, இவர் மலேசிய நாடாளுமன்றத்தில் மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்), மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராகவும் இருந்தார்.

வாழ்க்கை

பின்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா நாடுகளுக்கான மலேசியத் தூதராகப் பணி புரிந்த பிளான்சே ஓல்பெரி (Blanche Olbery) எனும் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த தூதரை மணந்தார். இவர்களுக்கு 2 ஆண்பிள்ளைகள்; 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் மலேசியா எயர்லைன்சு வானூர்தி நிறுவனத்தில் வானோடியாகப் பணிபுரிந்தவர் ஆவார்.

அரசியல்

1993-ஆம் ஆண்டில், அப்போதைய ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனல் கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மக்கள் முற்போக்கு கட்சியின் (People's Progressive Party) தலைவரானார். மேலும் இன்றுவரை அந்தக் கட்சியில் நீண்ட காலம் பணியாற்றிய தலைவரும் ஆவார். பல ஆண்டுகளாக மக்கள் முற்போக்கு கட்சிக்குள் இருந்து வந்த உட்கட்சிப் பூசல்களைக் கலைந்து; அந்தக் கட்சியை வலுவாக நிலைநிறுத்தியதற்காகப் புகழ் பெற்றார்.

1988 முதல் 1993 வரையில் பாரிசான் நேசனல் கூட்டணியில் PPP மக்கள் முற்போக்கு கட்சியின் உறுப்பினர் பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இவர் கட்சியை மறுசீரமைக்கத் தொடங்கினார்; மற்றும் 1994-இல் அந்தக் கட்சியை மீண்டும் பாரிசான் நேசனல் கூட்டணிக்குள் கொண்டு வந்தார்.

மக்கள் முற்போக்கு கட்சி

கட்சியின் உள் பூசல்களுக்குக் காரணமான பல பழைய தலைவர்கள்; கட்சியின் தலைமைத்துவததைத் திரும்பப் பெற விரும்பினர். அதன் விளைவாகக் கேவியஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருப்பினும், அவர் வெற்றி பெற்று, கட்சியை வளர்த்து, இறுதியில் அதன் கடந்த காலப் பெருமையை மீட்டெடுத்தார்.

இன்று மக்கள் முற்போக்கு கட்சி, நாடு முழுவதும் உள்ள 3700 கிளைகளில் 574,000 உறுப்பினர்களுடன் வலுவாக உள்ளது.

முன்னாள் துணை அமைச்சர்

கேவியஸ், மலேசியப் பிரதமர் துறையில் மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டுத் துறை துணை அமைச்சராக இருந்தார். இவரின் அமைச்சு மலேசியப் பிரதமர் துறையில் ஒரு தனி அமைச்சாகச் செயல்பட்டது. மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் பொறுப்புகள்:

  • மன்னிப்பு வாரியம்
  • அரசு தலைமை வழக்கறிஞர்களின் அறைகள்
  • சட்ட விவகாரப் பிரிவு
  • சட்ட உதவிப் பணியகம்
  • அமாணா ராயா நிறுவனம்
  • தீர்ப்பாயத்திற்கான கோலாலம்பூர் பிராந்திய மையம்
  • மலேசிய உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._கேவியஸ்&oldid=25009" இருந்து மீள்விக்கப்பட்டது