எம். எஸ். பொன்னுத்தாய்

எம். எஸ். பொன்னுத்தாய் (இறப்பு: சனவரி 17, 2012, வயது 87) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதசுவரக் கலைஞர். இவரே முதலாவது பெண் நாதசுவரக் கலைஞர் எனக் கருதப்படுகிறார்.

எம். எஸ். பொன்னுத்தாய்
எம். எஸ். பொன்னுத்தாய்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எம். எஸ். பொன்னுத்தாய்
இறப்பு சனவரி 17,
2012,
வயது 87
அறியப்படுவது நாதசுவரக்
கலைஞர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பிறந்தவர் பொன்னுத்தாய். இவரது தாய் பாப்பம்மாள் இசைக் கலைஞர் என்பதால், அவரது வழியில் நாதஸ்வரக் கலைஞராக பொன்னுத்தாய் புகழ்பெற்று விளங்கினார். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் மதுரையில் வசித்தார். மதுரையில் நடேசபிள்ளை என்பவரிடம் 9வது வயதில் நாதசுவரக் கலையைப் பயின்ற பொன்னுத்தாய் 13வது வயதில் அரங்கேற்றம் கண்டார். கணவர் விடுதலைப் போராட்ட வீரர் அ. சிதம்பர முதலியார். மறைந்த முன்னாள் முதல்வர்களான எம். பக்தவச்சலம், காமராஜர் இருவருக்கும் நெருங்கியத் தோழராக விளங்கியவர்.

விருதுகளும் பட்டங்களும்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._எஸ்._பொன்னுத்தாய்&oldid=8488" இருந்து மீள்விக்கப்பட்டது