எம். எல். ஏ (1957 திரைப்படம்)
எம். எல். ஏ என்பது 1957 ஆம் ஆண்டு வெளியான இந்திய தெலுங்கு மொழி சமூக அரசியல் திரைப்படமாகும். கே. பி. திலக் இயக்கியிருந்தார்.[1] திரைப்படத்தில் கேபி திலக்கே தயாரித்தும் இருந்தார்.
எம். எல். ஏ | |
---|---|
இயக்கம் | கே. பி. திலக்[1] |
தயாரிப்பு | கே. பி. திலக் |
இசை | பெந்தியாலா (இசையமைப்பாளர்) |
நடிப்பு | ஜக்கையா சாவித்திரி |
வெளியீடு | 1957 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
இப்படம் எம். எல். ஏ என்ற தலைப்பிலேயே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1957ல் வெளியானது.
நடிகர்கள்
- ஜக்கையா - தாஸ்
- சாவித்திரி - நிர்மலா
- கும்மடி - தாமோதரன்
- இரமண மூர்த்தி - ரமேஷ்
- கிரிஜா - கமலா
- இரமண ரெட்டி
- நாகபூசணம்
திரை முக்கியத்துவம்
இத்திரைப்படம் நடிகர் ஜே.வி. ரமண மூர்த்தியின் முதல் படம் ஆகும். பின்னணி பாடகி எஸ்.ஜானகி பாடிய முதல் படம். அவரது முதல் பாடல் 'நீ ஆசா அடியாசா லம்படோல்லா ராம்தாசா' என்பதாகும்
இசை
ஆருத்ராவின் பாடல் வரிகளுக்கு, பெந்தியாலா நாகேஸ்வரராவ் இசை அமைத்துள்ளார். கண்டசாலா, எஸ். ஜானகி, பி. சுசீலா, மாதவப்பெட்டி சத்யம், ஜிக்கி, ஏ.எம்.ராஜா ஆகியோர் பின்னணி பாடியிருந்தனர்.
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 M. L. Narasimham. "M.L.A (1957)". The Hindu.
வெளி இணைப்புகள்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் எம். எல். ஏ (1957 திரைப்படம்)
- யூடியூபில் Kaaman kandu mogam - A song sung by பி. பி. ஸ்ரீனிவாஸ் and ஜிக்கி from the dubbed Tamil version.