எம். எசு. பாசுகர்

எம். எஸ். பாஸ்கர் (M. S. Bhaskar) என்பவர் ஒரு தமிழ் நடிகரும் பின்னணிக் குரல் கொடுப்பவரும் ஆவார். இவரது தந்தை முத்துப்பேட்டை சோமுத் தேவர், தாயார் சத்தியபாமா. இவரது தந்தை நிலக்கிழார் ஆவார். இவருக்கு இரண்டு அக்காக்கள் உள்ளனர். முதலாமவர் ஹேமாமாலினி சென்னையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் இரண்டாமவர் தாரா மும்பையில் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் உள்ளனர். இவருக்கு தம்பி ஒருவர் உள்ளார். 1987 ஆம் ஆண்டு திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.[1][2]

எம். எஸ். பாஸ்கர்
MS Bhaskar at Dharmadurai Success Meet.jpg
தர்மதுரையில் பாஸ்கர்
பிறப்புமுத்துப்பேட்டை சோமு பாஸ்கர்
13 செப்டம்பர் 1957 (1957-09-13) (அகவை 67)
)நாகப்பட்டினம் , தஞ்சாவூர் மாவட்டம், மதராஸ் மாகாணம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987– நடப்பு
வாழ்க்கைத்
துணை
சீலா
பிள்ளைகள்2

இவரது தந்தை முத்துப்பேட்டையைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் பிறந்து வளர்ந்தது நாகப்பட்டினம். நாகப்பட்டினத்திலும் சென்னையிலும் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சென்னை பச்சையப்பா கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களான சின்னப் பாப்பா பெரியப் பாப்பா, செல்வி, திரைப்படங்கள் சிவகாசி, மொழி போன்றவற்றால் பெரிதும் அறியப்பட்டார். இவர் மொழி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த குணச்சித்திர நடிகர் விருது பெற்றார்.[3] இவர் 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவர் பற்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முகவராகவும் பணி செய்துள்ளார். காமராஜ் படத்தில் காமராஜ் பாத்திரத்துக்கும் சேது படத்தில் நாயர் இராமன் பாத்திரத்துக்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._எசு._பாசுகர்&oldid=21537" இருந்து மீள்விக்கப்பட்டது