எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில்

எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி பகுதியின் எமனேசுவரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[2][3]

எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில்
எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில் is located in தமிழ் நாடு
எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில்
எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயில்
ஆள்கூறுகள்:9°32′47″N 78°36′02″E / 9.5464°N 78.6006°E / 9.5464; 78.6006Coordinates: 9°32′47″N 78°36′02″E / 9.5464°N 78.6006°E / 9.5464; 78.6006
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம் மாவட்டம்
அமைவிடம்:எமனேசுவரம், பரமக்குடி
சட்டமன்றத் தொகுதி:பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:89 m (292 அடி)
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜ பெருமாள்
தாயார்:பெருந்தேவி
குளம்:வைகை
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி பிரம்மோற்சவம்,
புரட்டாசி சனிக்கிழமைகள்
வரலாறு
கட்டிய நாள்:500 வருடங்கள் பழைமையானது[1]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 89 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள எமனேசுவரம் வரதராஜ பெருமாள் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°32′47″N 78°36′02″E / 9.5464°N 78.6006°E / 9.5464; 78.6006 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் தாயார் பெருந்தேவி ஆவர். இக்கோயிலின் தலவிருட்சம் அரசமரம்; தீர்த்தம் வைகை ஆகும். பாஞ்சராத்ரம் முறைப்படி இக்கோயிலில் பூசைகள் நடத்தப்படுகின்றன. கருவறை விமானம் புண்ணியகோடி விமானமாகும். வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், சீனிவாசப் பெருமாள், அலர்மேல்மங்கை தாயார், சக்கரத்தாழ்வார் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4] கோயில் கும்பாபிசேகம் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி ஆறாம் நாள் நடைபெற்றது.[5] வைகாசி பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[6]

மேற்கோள்கள்

  1. ValaiTamil. "அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  2. "எமனேஸ்வரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ராமநாதபுரம்". amarkkalam.forumta.net. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
  3. "Lokal Tamil - தமிழ் செய்திகள்". tamil.getlokalapp.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
  4. "Varadaraja Perumal Temple : Varadaraja Perumal Varadaraja Perumal Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  5. தினத்தந்தி (2022-02-07). "எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.
  6. "Arulmigu Varatharajaperumal Temple, Emaneswaram - 623701, Ramanathapuram District [TM046167].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-11.

வெளி இணைப்புகள்