எப்போதும் வென்றான்

எப்போதும் வென்றான் (ஆங்கிலம்:EPPODUMVENDRAN) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி. ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டத்தின் 3-ஆவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்: 3) ஆகும்.[4][5] இந்த ஊரில் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் என்னும் பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. வழிபாட்டுத் தலம் என எடுத்துக் கொண்டால், இங்கு சோலையப்பசாமி திருக்கோவில் உள்ளது. ‘எப்போதும் வென்றான்’ என்பதன் பெயர்க்காரணத்திற்காக சில வரலாறுகளை சொல்கிறார்கள். குறிப்பாக, பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தை ஆட்சிசெய்த வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னர் சேவல் சண்டையில் அதிக வெற்றிகளை குவிக்க உதவிய களமாக இந்த ஊர் இருந்துள்ளதாக சொல்கிறார்கள். இந்த ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. தனியார் சார்பில் பவர்பிளாண்ட் ஒன்றும், சில பஞ்சாலைகளும் உள்ளன.

எப்போதும் வென்றான்
—  கிராமம்  —
எப்போதும் வென்றான்
இருப்பிடம்: எப்போதும் வென்றான்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°01′15″N 78°03′00″E / 9.020945°N 78.050019°E / 9.020945; 78.050019Coordinates: 9°01′15″N 78°03′00″E / 9.020945°N 78.050019°E / 9.020945; 78.050019
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ஜி. லட்சுமிபதி, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை பரிசோதனை அதிகாரியாக இருந்த சுப்பிரமணியம் 1980-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி தான் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த மர்மமரணம் குறித்த உண்மைத் தகவல்களை எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு வெளியிட தயக்கம் காட்டிவந்தது. எனவே, இதனை கண்டித்து, அப்போதைய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதி 1982-இல் மதுரை முதல் திருச்செந்தூர்வரை 200 கி.மீ. தொலைவுக்கு ‘நீதி கேட்டு நெடும்பயணம்' என்ற நடைபயணத்தை மேற்கொண்டார். தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய நடைபயணமாக கருதப்படும் இந்த பயணத்தை எப்போதும் வென்றான் கிராமத்தின் வழியாக மேற்கொண்ட கலைஞர், இந்த கிராமத்தில் சில மணிநேரம் ஓய்வும் எடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’ தொகுப்பிலும் விரிவாக குறிப்பிட்டுள்ளார் கலைஞர் கருணாநிதி. அதோடு மட்டுமின்றி, தேர்தல் பரப்புரைகளின்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் ‘எப்போதும் வென்றான்’ என்று ஒரு கிராமம் இருக்கிறது என சொல்லி, அதேபோல ‘எப்போதும் வென்றான்களாக நாம் இருக்க வேண்டும்’ என பேசுவார் கலைஞர்.

அமைவிடம்

மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் எட்டையபுரத்திலிருந்து சுமார் 10 கி.மீ.தூரத்திலும், தூத்துக்குடியில் இருந்து சுமார் 27 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 225 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 828 பேர் வசிக்கின்றார்கள். இதில் ஆண்கள் 403, பெண்கள் 425 பாலின விகிதம் 960. எழுத்தறிவு பெற்றவர்கள் 372 பேர். இதில் 271 பேர் ஆண்கள்; 101 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 53.22. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 129 ஆண் குழந்தைகள் 66,பெண் குழந்தைகள் 63 ஆவர்.[6]

நிர்வாக அலகு

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-04-28.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-04-28.
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 28, 2015.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://tamilar.wiki/index.php?title=எப்போதும்_வென்றான்&oldid=88816" இருந்து மீள்விக்கப்பட்டது