என் இனிய இயந்திரா (புதினம்)
என் இனிய எந்திரா எனப்படுவது மறைந்த தமிழ் எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஒரு அறிவியல் புனைகதை ஆகும். 1980 களில் பிற்பகுதியில் எழுதிய இந்தப் புத்தகம் ஆனந்த விகடன் இதழில்[3] ஒரு தொடராக வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாவலின் தொடர்ச்சியாக மீண்டும் ஜீனோ எனும் புத்தகத்தையும் 1987ல் [4] ஆசிரியர் சுஜாதா எழுதி வெளியிட்டார்.
என் இனிய இயந்திரா | |
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
வெளியீட்டாளர் | கிழக்குப் பதிப்பகம்[1], விசா பப்ளிகேஷன்ஸ்[2] |
ISBN | 978-81-8493-555-4 |
கதைப் பின்னணி
கி.பி 2021 இல் நடப்பதாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ஜீவா எனும் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியில் இந்தியத் துணைக்கண்டம் இருப்பதாக கதையமைப்பு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கை அமைப்பு, வாழ்நாட்கள், பெற்றுக் கொள்ளும் குழந்தையின் பால், எண்ணிக்கை என்று அனைத்து விடயங்களிலும் இந்த சர்வாதிகாரி தலைமையிலான ஆட்சி கட்டுப்பாடுகளை விதிக்கின்றது. இதில் இருந்து நாட்டை மீட்க புறப்படும் ரவி, மனோ எனும் இரு புரட்சிக்காரர்களும் இவர்களுடன் சந்தர்ப்ப சூழ்நிலையால் இணைந்து கொள்ளும் நிலா எனும் பெண்ணைச் சுற்றியும் கதை நகர்கின்றது.
இந்தக் கதையில் முக்கியமான பாத்திரமாக ஜீனோ எனும் இயந்திர நாய் காட்டப்படுகின்றது. சாதாரண செல்லப்பிராணிக்கு பிரதியீடாகச் செய்யப்பட்ட இந்த இயந்திர நாய் மெல்ல மெல்ல தன் அறிவை விருத்தி செய்வதுடன் மனிதர்களைப் போல சிந்திக்கவும் தொடங்குகின்றது. ஆரம்பத்தில் பயம், இரக்கம், பாசம் போன்ற உணர்வுகளை அறியாதிருந்த நாய் மெல்ல மெல்ல அனைத்து மனித இயல்புகளையும் பெறத் தொடங்குகின்றது.
குறிப்புகள்
- ↑ என் இனிய இயந்திரா-நியூ கொரைசான் மீடியா[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ நூல்உலகம்
- ↑ "ரைட்டர்சுஜாதா.காம் இல் இருந்து". http://www.writersujatha.com/catalog/product_info.php?products_id=89.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "மீண்டும் ஜீனோ" இம் மூலத்தில் இருந்து 2009-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090204214706/http://www.writersujatha.com/catalog/product_info.php?products_id=91.