எனக்கொரு மகன் பிறப்பான் (1996 திரைப்படம்)
எனக்கொரு மகன் பிறப்பான் (Enakkoru Magan Pirappan) கேயார் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] ராம்கி, குஷ்பூ, விவேக், அஞ்சு அரவிந்த், வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர். வி. நடராசன் தயாரிப்பில், கார்த்திக் ராஜா இசை அமைத்த இப்படம் 15 ஆகஸ்ட் 1996 ஆம் தேதி வெளியானது. ஆடியதே கண்மணி என்ற மலையாளப் படத்தின் மறு ஆக்கமாகும்.
எனக்கொரு மகன் பிறப்பான் (1996 திரைப்படம்) | |
---|---|
VCD cover | |
இயக்கம் | கோதண்ட இராமையா |
தயாரிப்பு | பிரமீட் நடராஜன் |
திரைக்கதை | கேயார் |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | பி. லோகேசுவரராவ் |
படத்தொகுப்பு | ஆர். டி. அண்ணாதுரை |
கலையகம் | பிரமீடு திரைப்பட நிறுவனம் |
வெளியீடு | 15 ஆகத்து 1996 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
ராம்கி, குஷ்பூ, விவேக், அஞ்சு அரவிந்த், வடிவுக்கரசி, ஆர். சுந்தரராஜன், செந்தில், வெண்ணிறாடை மூர்த்தி, வினு சக்ரவர்த்தி, சின்னி ஜெயந்த், பாண்டு, தியாகு.
கதைச்சுருக்கம்
பணக்கார ரங்கநாயகிக்கு (வடிவுக்கரசி), கோபி (பாண்டு), மது (சின்னி ஜெயந்த்), பாலு (ராம்கி) என்று மூன்று மகன்கள். தனக்கு பேரன் பிறந்தால், அவனுக்கு தன் சொத்து முழுவதையும் எழுதிவைப்பதாக கூறியிருந்தார் ரங்கநாயகி. மூத்த மகன்களான கோபி மற்றும் மதுவிற்கு திருமணமாகி பெண் குழந்தைகள் இருந்தன. கடைசி மகனான பாலுவிற்கு திருமணம் ஆகவில்லை.
திருமண விழாக்களில் பாடகராக பணி புரியும் பாலு, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஸ்வாதியை (குஷ்பூ) காதலிக்கிறார். பின்னர் அவ்விருவருக்கும் திருமணமாகி, ஸ்வாதி கற்பமாகிறாள். அதே சமயம், பாலுவின் தோழன் ராஜாவிற்கும் திருமணமாகி, அவனின் மனைவி சாந்தியும் (அஞ்சு அரவிந்த்) கர்ப்பமாக இருந்தாள். ஸ்வாதிக்கும் சாந்திக்கும் ஒரே நாளில் குழந்தை பிறக்கிறது. பாலுவிற்கு பெண் குழந்தையும், ராஜாவிற்கு ஆண் குழந்தையும் பிறக்கின்றன.
அந்நிலையில், ரங்கநாயகிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பெண் குழந்தை பிறந்த அதிர்ச்சியான செய்தியை அவரிடம் மறைக்க வேண்டுகிறார் மருத்துவர். ராஜாவின் குழந்தையை பாலுவின் குழந்தையை காட்ட, குணமாகிறார் ரங்கநாயகி. தன் தாயின் உயிரைக் காப்பாற்ற அந்த பொய்யை நீடிக்கிறான் பாலு. ரங்கநாயகிக்கு உண்மை தெரிய வந்ததா? பாலுவிற்கு சொத்து கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.
ஒலிப்பதிவு
அருண்மொழி, இளந்தேவன் எழுதிய பாடல் வரிகளுக்கு, கார்த்திக் ராஜா இசை அமைத்திருந்தார்.[2][3]
தயாரிப்பு
துவக்கத்தில், அஞ்சு அரவிந்திற்கு ஜோடியாக ரமேஷ் அரவிந்த் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியில், அந்த கதாப்பாத்திரத்தில் விவேக் நடித்தார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "கேயார்' டைரக்ஷனில் விஜயகாந்த் நடித்த 'அலெக்சாண்டர்': இசை அமைப்பாளராக கார்த்திக்ராஜா அறிமுகமானார்" (in ta). 25 August 2013 இம் மூலத்தில் இருந்து 27 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130827133249/http://cinema.maalaimalar.com/2013/08/25224946/keyar-cinema-history.html.
- ↑ "musicindiaonline.co". http://musicindiaonline.co/#/album/29-Tamil_Movie_Songs/16222-Enakoru_Magan_Pirappaan/.
- ↑ "www.music.haihoi.com". http://www.music.haihoi.com/filmsongs.php?songs=Enakkoru%20Magan%20Pirappan&id=5038.
- ↑ "groups.google.com". https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/J68fuQkdCtw.