எங்க முதலாளி

எங்க முதலாளி திரைப்படம் 1993ம் ஆண்டு லியாகத் அலிகான் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த், கஸ்தூரி முதன்மை கதாபாத்திரம் ஏற்றிருந்தனர். மீனா பஞ்சு அருணாசலம் தயாரிக்க, இளையராஜா இசையமைப்பில் 13 நவம்பர் 1993 தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படங்களில் ஒன்றாகும்.[1][2]

எங்க முதலாளி
சுவரிதழ்
இயக்கம்லியாகத் அலிகான்
கதைபஞ்சு அருணாசலம்
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
கஸ்தூரி
நெப்போலியன்
ராதாரவி
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புஅசோக் மேத்தா
விநியோகம்பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ஸ்
வெளியீடு13 நவம்பர் 1993
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

விஜயரகுநாதன் (விஜயகாந்த்) கிராமத்தில் வசிக்கும் இளகிய மனமுள்ள நிலக்கிழார், இவருடன் தம்பி பாலுவும் (ராஜா) தாயும் (ஜானகி) வசித்து வருகின்றனர். ஏழை விவசாயியை கொலை செய்த குற்றத்திற்காக மைத்துனன் ஜெயராமனை (நெப்போலியன்) சிறைக்கு அனுப்புவதன் மூலம், மாமாவுடன் (ஆர். சுந்தர்ராஜன்) பகை உண்டாகிறது. விஜயரகுநாதனும் தன் மருமகள் கல்யாணியும் (கஸ்தூரி) குழந்தை பருவம் முதலே காதல் வளர்க்கின்றனர். விஜயரகுநாதன் கிராம சங்க தேர்தலில் மைத்துனன் சீதாராமனுக்கு, பக்கபலமாக இருக்கிறார். சீதாராமனுக்கும், விஜயரகுநாதனுக்கும் தேர்தல் நேரத்தில் பகை உண்டாக, சீதாராமன் தன் மகள் கல்யாணிக்கும் பம்பரம் பாண்டுவுக்கும் (விவேக்) திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்கிறார். திருமண நாளன்று, சீதாராமனின் அடியாட்களை அடித்துவிட்டு கல்யாணியை மணம்முடிக்கிறார் விஜயரகுநாதன்.

பாலுவுக்கும் கல்யாணியின் சிறிய தங்கை காவேரியுடன் காதல் வயப்படுகிறார். இதனால் பாலுவுக்கும் விஜயரகுநாதனுக்கும் பகை உண்டாகிறது.

நடிகர்கள்

பாடல்கள்

எங்க முதலாளி
பாடல்கள்
வெளியீடு1993
ஒலிப்பதிவு1993
இசைப் பாணிதமிழ்த் திரைப்பட பாடல்கள்
நீளம்24:39
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 1993ம் ஆண்டு இப்படத்தின் பாடல்கள் வெளியானது, இப்படத்திலுள்ள 5 பாடல்களை வாலியும், பஞ்சு அருணாசலமும் எழுதியிருந்தனர். [3]

பாடல்கள் பாடல் பாடியவர்கள் கால அளவு
1 'பூமிக்கும் சாமிக்கும்' மனோ, சித்ரா 5:05
2 'கொல்லி மல்லி' மனோ, சுவர்ணலதா 4:49
3 'குங்குமம் மஞ்சளுக்கும்' கே. ஜே. யேசுதாஸ், ஜானகி 5:00
4 'மகத்தான உறவுகளை' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:44
5 'மருமகளே' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 5:01

மேற்கோள்கள்

  1. "Enga Muthalali". entertainment.oneindia.in இம் மூலத்தில் இருந்து 2014-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140715070232/http://entertainment.oneindia.in/tamil/movies/enga-muthalali.html. பார்த்த நாள்: 2013-01-03. 
  2. "Enga Muthalali". en.600024.com இம் மூலத்தில் இருந்து 2013-04-10 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130410043009/http://en.600024.com/movie/enga-muthalali/. பார்த்த நாள்: 2013-01-03. 
  3. "Enga Muthalali - Illayaraja". thiraipaadal.com. http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBIRR00147. பார்த்த நாள்: 2013-01-03. 
"https://tamilar.wiki/index.php?title=எங்க_முதலாளி&oldid=31192" இருந்து மீள்விக்கப்பட்டது