எகிப்திய மொழி
பண்டைய எகிப்தில் எழுதப்பட்ட மொழி எகிப்திய மொழி ஆகும். இம்மொழியின் எழுத்துக்கள் படவெழுத்துகளில் எழுதப்பட்டது. இது ஒரு ஆபிரிக்க, ஆசிய மொழியாகும். ]].[1][2] இம் மொழிக்கு கிமு 3500 இருந்து எழுதப்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. அக்கால்த்து மக்கள் கல்லிலும், பாப்பைரஸ் என்னும் ஒரு வகை கோரையில் செய்த காகிதத்திலும் எழுதினா்.[3] இந்த மொழி கிபி 7 ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்டு வந்தது. தற்போது எகிப்தில் அரபு மொழி பேசப்படுகிறது.[4][5]
மொழி ஆய்வு
1799 ஆம் ஆண்டில் நெப்போலியனின் போர்வீரர்கள் நைல் நதியின் ரோசெட்டா முகத்தூவாரத்தின் அருகில் பாசறை அமைத்தபோது, அங்குள்ள கற்களில் பழைய எகிப்திய மொழியிலும், பின்னர் உண்டான கிரேக்க மொழியிலும் இருத்தனவற்றை ஆராய்ந்தனர். கம்போலியன் என்ற பிரெஞ்சு அறிஞர் நன்கு ஆய்ந்து, பண்டைய எகிப்திய மொழியை முதலில் கட்டமைக்கத் தொடங்கினார். பின்னர் பல அறிஞர்கள் அதனை வளர்த்தெடுத்தனர். கிறித்தவ மதத்திற்கு பின்னர் எகிப்தியர் பெருமளவு மாறியதால், முந்தைய நூல்களை எரித்தும், சிதைத்தும் விட்டனர். மீதமுள்ள நூல்கள் கல்லறைகளிலும், குப்பைக்கூளங்களிலும் ஓரளவு கிடைத்தன.
எகிப்திய இலக்கியம்
பண்டைய எகிப்திய இலக்கியத்தை ஐந்து வகைகளாப் பிரிக்கின்றனர். [6]
- தலைக்காலம் - கி. மு. 2400 வரை : மொழி மாற்றமின்றி திகழ்ந்தது.
- இடைக்காலம் - கி. மு. 1300 வரை : மொழி மாற்றமின்றி திகழ்ந்தது.
- கடைக்காலம் - கி. மு. 700 வரை : மொழி மாற்றமின்றி திகழ்ந்தது.
- சனநாயகக் காலம் - கி. பி. 470 வரை : வியாபாரத் தொடர்பால் மக்கள், பழமை மொழியில் மாற்றத்தை செய்தமையால், மொழிச்சிதைவுத் தொடங்கியது.
- கிறித்தவ காலம் - கி. பி. 750 வரை : கிறித்தவ ஆளுமையால், கிரேக்கச் சொற்களை அதிகம் கலந்து, மொழிச்சிதைவினை அதிகமாக்கினர்.
அதன் பிறகு இசுலாமிய மத வளர்ச்சியால் அரபு மொழி வளர்ந்து, பண்டைய எகிப்திய மொழியைப் பயன்படுத்துவோர் வெகுக்குறைவாக ஆயினர். .
மேற்கோள்கள்
- ↑ (Loprieno 1995, ப. 1)
- ↑ "Egyptian and Hebrew". Encyclopedia of Hebrew Language and Linguistics. (2013). Leiden and Boston: Brill Publishers. DOI:10.1163/2212-4241_ehll_EHLL_COM_00000721. ISBN 978-90-04-17642-3.
- ↑ https://www.tamilvu.org/ta/library-kalaikalangiyam-lkk02-html-lkk02474-93570
- ↑ "Languages Spoken In Egypt" (in en). 25 April 2017 இம் மூலத்தில் இருந்து 2020-11-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201119135525/https://www.worldatlas.com/articles/languages-spoken-in-egypt.html.
- ↑ Ondras, Frantisek (2005-04-26) (in en). Egyptian Colloquial Arabic. Czech Institute of Egyptology. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788086277363. https://books.google.com/books?id=jjiZAAAACAAJ&q=egyptian+colloquial+arabic. பார்த்த நாள்: 2020-10-25.
- ↑ https://www.tamilvu.org/ta/library-kalaikalangiyam-lkk02-html-lkk02475-93571