ஊதல் (சங்ககாலம்)

சங்க்கால ஊதல் வகைகளில் குழல், தூம்பு முதலானவை குறிப்பிடத்தக்கவை.

குறும்பரந்தூம்பு
உயிர்த்தூம்பு
குழல்

முழவு, ஆகுளி, தட்டை, எல்லரி, பதலை முதலானவை முழக்கும் பறைக்கருவிகள். கோடு என்னும் யாழ் நரம்புக்கருவி. கூத்தர் இவ்வகையான இசைக்கருவிகளை வழிநெடுக முழக்கிக்கொண்டே ஊர் ஊராகச் செல்வதும் ஊர்மக்களுக்கு இசையோடு பாடி ஆடிக் காட்டுவதும் வழக்கம்.[1]

குழல்
குழல் தொன்றுதொட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி.
உயிர்த்தூம்பு
ஊதும் துளைகளைக் கண்ணாகக் கொண்ட இதன் இசை யானை பிளிறுவது போல இருக்கும். [2]
குறும்பரந்தூம்பு
இது ஏழிசைப் பண்ணில் இளியிசையைக் கூட்டித் தரக்கூடியது. [3]

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. மலைபடுகடாம் 1-13
  2. கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பு – மலைபடுகடாம் அடி 6
  3. இளிப்பயிர் இயம்பும் குறும்பரந்தூம்பு – மலைபடுகடாம் அடி 7
"https://tamilar.wiki/index.php?title=ஊதல்_(சங்ககாலம்)&oldid=13127" இருந்து மீள்விக்கப்பட்டது