ஊட்டி குதிரைப்பந்தயத் திடல்

ஊட்டி குதிரைப்பந்தயத் திடல் (Ooty Racecourse) தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் ஓர் உயர்நிலத்தில் கட்டப்பட்டுள்ள குதிரைப்பந்தயத் திடல் ஆகும். கோடைகால பந்தயங்களுக்காக கடல் மட்டத்திலிருந்து 2,268 மீட்டர் உயரத்தில் நகரத்தின் மையப்பகுதியான ஊட்டி தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் இத்திடல் அமைந்துள்ளது.

குதிரைப்பந்தயத் திடலின் தோற்றம்
குதிரைப்பந்தயத் திடல், ஊட்டி

இத்திடலின் 100 ஆண்டு கால வரலாறு குறிப்பிடத்தக்க பல அரிய தனித்தன்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. ”அறுபதுகளின் மத்தியில் நான் ஊட்டி குதிரைப் பந்தயத்தின் தீவிர ரசிகன் ஆக இருந்தேன். தொகுதி 1 ஊட்டி குதிரைப் பந்தயத்தை 1995 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள் எம்.ஏ.எம். இராமசாமி தன்னுடைய குதிரையான கிரேட் சிபெக்டக்கல் மூலம் வெற்றியை ஈட்டியது மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய கின்னசு சாதனையாகும் என்று குதிரைப்பந்தய ஆர்வலரும் ஊட்டி நகர பழங்குடியினருமான கே. பீமன் என்பவர் தெரிவித்தார்.

1980 ஆம் ஆண்டுகள் இத்திடலின் பிரமாண்டமான வளர்ச்சியைக் காண முடிகிறது. இக்காலத்தை ஊட்டி குதிரைப் பந்தயத்தின் பொற்காலம் என்று குறிப்பிடலாம். இக்காலத்தில் சூன் மாதம் வரையில் பந்தயப் பருவம் நீட்டிக்கப்பட்டது. இதனால் நீல மலையில் சுற்றுலா என்பதைத் தாண்டி ஆயிரக்கணக்கான கோடைக்கால வேலை வாய்ப்புகள் இணைப்பை உருவாகின. தொழில்முறை பந்தய வீர்ர்கள் பந்தயத்தை எதிர் நோக்கி இங்கு தங்கத் தொடங்கினர்.

கொளுத்தும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக பாரம்பரியமாக மக்கள் சுற்றுலா வரும் ஏப்ரல் முதல் சூன் வரையிலான கோடைக்காலப் பருவத்தில் குதிரைப் பந்தயங்கள் இங்கு நடத்தப்பட்டன. இந்த பந்தயத்திடல் ஊட்டியின் மத்தியில் 55 ஏக்கர் பரப்பளவில் 2.4 கிலோமீட்டர் நீளம் கொண்ட்தாக அமைந்துள்ளது. இந்தியாவிலுள்ள மிகவும் புகழ்பெற்ற குதிரைப் பந்தய மைதானங்களில் ஊட்டி குதிரைப் பந்தய மைதானமும் ஒன்றாகும். நீலகிரி தங்கக் கோப்பை குதிரைப் பந்தயம் இங்கு நடத்தப்படும் பந்தயங்களில் பாரம்பரியமாகப் புகழ்பெற்றதும் பிரபலமானதுமான பந்தயமாகும்.

இந்தப் பந்தயத் திடலின் 125 கால நிறைவு காரணமாக 2011 ஆம் ஆண்டில் நூற்றாண்டைக் கடந்த வெள்ளிவிழா கோப்பை சிறப்பு குதிரைப் பந்தயம் ஒன்று நடத்தப்பட்டது[1]. ஒரு தோட்டத்தை உருவாக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்தன[2][3][4][5][6][7]. இக்குதிரைப் பந்தயத் திடலில் மார்ச் 2011 ஆம் ஆண்டில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. சிகரெட்டு இத்தீவிபத்திற்கான காரணமாக இருக்கலாம் என்றும் நம்பப்பட்டது. ஆனால் விபத்தில் குதிரைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை[8].

மேற்கோள்கள்

  1. D. Radhakrishnan (2011-05-04). "Lucky draw to mark Ooty racing milestone". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.
  2. "Beauty of race course to be enhanced". The Hindu. 2011-04-15. Archived from the original on 2011-04-18. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
  3. D. Radhakrishnan (2011-04-14). "Ooty waits for the race to begin". The Hindu. Archived from the original on 2011-04-18. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22.
  4. "Ooty Horse Racing". indiaandindians.com. Archived from the original on 2011-09-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.
  5. "Ooty (Udhagamandalam): Racecourse". lonelyplanet.com. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.
  6. "Ooty Race Course". india9.com. 2005-06-07. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.
  7. D. Radhakrishnan (2011-04-17). "An important milestone in the Ooty racing season". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.
  8. "Fire at Ooty race course, horses safe". Times of India. 2011-03-12. Archived from the original on 2012-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-09-22. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

புற இணைப்புகள்