ஊடறு (நூல்)
ஊடறு முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களை உள்ளடக்கி, றஞ்சி(சுவிஸ்), தேவா(யேர்மனி), நிரூபா(யேர்மனி), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான ஒரு நூலாகும். இதனுள்ளே 13 கட்டுரைகளும், 5 சிறுகதைகளும், 24 கவிதைகளும், 3நூல் விமர்சனங்களும் 5 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.
ஊடறு | |
---|---|
நூல் பெயர்: | ஊடறு |
ஆசிரியர்(கள்): | தொகுப்பு |
வகை: | தொகுப்பு |
துறை: | {{{பொருள்}}} |
காலம்: | மே 2002 |
இடம்: | சென்னை (விடியல் பதிப்பகம்) |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 168 |
பதிப்பகர்: | ஊடறு வெளியீடு |
பதிப்பு: | மே 2002 |
ஆக்க அனுமதி: | ஆசிரியர் குழுவினது (றஞ்சி(சுவிஸ்), தேவா(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), நிருபா(ஜேர்மனி) |
அட்டைப்படம்
ஊடறுவின் முன் அட்டைப்படத்தை அருந்ததி ராஜும், பின் அட்டைப்படத்தை வாசுகி ஜெயசங்கரும் வரைந்துள்ளனர்.
உள்ளடக்கம்
படைப்புகளின் தன்மை
தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகள் அரசியல், சமூகம், பொருளாதாரம்.. என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப்படுத்திய பல தகவல்களைக் கொண்டுள்ளன. கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப்பட்டுள்ளன. சில கவிதைகள் போர் தந்த பாதிப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பிரிவின் துயர்களையும் பேசியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருக்கின்றது. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் படிந்திருக்கின்றன.
வெளி இணைப்புக்கள்
- ஊடறு - நூலகம் திட்டம்
- ஊடறு - ஓர் பார்வை - ரதன்
- ஊடறு - ஒரு பார்வை
- ஊடறு பற்றி... - கோசல்யா சொர்ணலிங்கம்