உ. வே. சா. விருது

உ. வே. சா. விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது உ. வே. சாமிநாதையர் நினைவாக வழங்கப்படுகிறது. கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள், ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்தும், வெளிக்கொணர்ந்தும் தமிழுக்கு வளம் சேர்க்கும் பணிகளை மேற்கொள்ளும் தமிழறிஞர்களின் சேவைகளைப் பாராட்டும் விதமாக இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 புலவர் செ. இராசு 2012
2 ம. வே. பசுபதி[1] 2013
3 ம. அ. வேங்கடகிருஷ்ணன்[2] 2017
4 ச.கிருஷ்ணமூர்த்தி[3] 2018

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உ._வே._சா._விருது&oldid=19266" இருந்து மீள்விக்கப்பட்டது