உ. இராதாகிருஷ்ணன்

உருத்திராபதி இராதாகிருஷ்ணன் (27 சூன் 1943 - 6 செப்டம்பர் 2015)புகைப்படத்திற்கு நன்றி gossip.sooriyanfm.lk இலங்கைத் தமிழ் கருநாடக வயலின் இசைக் கலைஞர் ஆவார்.

உ. இராதாகிருஷ்ணன்
உ. இராதாகிருஷ்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
உ. இராதாகிருஷ்ணன்
பிறப்புபெயர் இராதாகிருஷ்ணன்
பிறந்ததிகதி (1943-06-27)சூன் 27, 1943
பிறந்தஇடம் இணுவில், யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு செப்டம்பர் 6, 2015(2015-09-06) (அகவை 72)
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது வயலின் கலைஞர்
பெற்றோர் உருத்திராபதி, தையலம்மாள்
பிள்ளைகள் சைந்தவி, ரகுகுலன்

வாழ்க்கைச் சுருக்கம்

இராதாகிருஷ்ணன் யாழ்ப்பாணம் இணுவிலில் உருத்திராபதி, தையலம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர் .[1] தந்தை உருத்திராபதி நாதசுவரம், வயலின் இசைப்பதிலும் திறமை பெற்றவர். இராதாகிருஷ்ணனும் தந்தையிடமே வயலின் மீட்டக் கற்றுக் கொண்டார்.[1] பின்னர் தமிழ்நாடு சென்று பரூர் எம். எஸ். அனந்தராமன் என்பவரிடம் வயலினும், தஞ்சாவூர் எம். தியாகராஜனிடம் வாய்ப்பாட்டும் கற்றுக் கொண்டார்.[1]

பணி

யாழ்ப்பாணத்தில் மதுரை சோமு, சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, தஞ்சாவூர் டி. எம். தியாகராஜன், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோருக்கு வயலின் வாசித்தார்.[1] யாழ்ப்பாணத்தில் கண்ணன் இசைக்குழுவில் சேர்ந்து வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றினார். பின்னர் மிருதங்கக் கலைஞர் சிவபாதம், மெல்லிசைப் பாடகர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து "சிவராதாகிருஷ்ணமூர்த்தி குழு" என்ற பெயரில் தனியாக ஓர் இசைக்குழுவை ஆரம்பித்தார்.[1] யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவரது தனியிசைக்கச்சேரிகள் இறுவட்டுகளாக "கானாமிருதம்" என்ற பெயரில் வெளிவந்துள்ளன.[1]

மறைவு

2015 செப்டம்பர் 6 அன்று மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூரில் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்ற இசையரங்கில் இராதாகிருஷ்ணன் வயலின் வாசித்துக்கொண்டிருந்த வேளையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு காலமானார்.[2] இக்கச்சேரியில் அவரது மகள் சைந்தவி வயலினும், மகன் இரகுகுலன் மிருதங்கமும் வாசித்துக் கொண்டிருந்தனர். இராதாகிருஷ்ணனின் சகோதரர் சந்தானகிருஷ்ணனும் ஒரு புகழ் பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஆவார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உ._இராதாகிருஷ்ணன்&oldid=8067" இருந்து மீள்விக்கப்பட்டது