உள்ளம் கவர்ந்த கள்வன்

உள்ளம் கவர்ந்த கள்வன் (Ullam Kavarntha Kalvan) என்பது 1987 இல் வெளிவந்த இந்தியத் தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும்.[1] 1976 இல் வெளிவந்த சிச்சோர் என்ற இந்தி திரைப்படத்தின் மறுஆக்கமான, இத்திரைப்படத்தில் பாண்டியராஜன், நிழல்கள் ரவி, ரேகா ஆகியோர் நடித்திருந்தனர். வி.கே.ராமசாமி மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். பஞ்சு அருணாசலம் இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார். அசோக் குமார் ஒளிப்பதிவு மேற்கொண்டார். இப்படம் 1987 செப்டம்பர் 4 அன்று வெளியானது.

உள்ளம் கவர்ந்த கள்வன்
இயக்கம்அசோக் குமார்
தயாரிப்புதூயவன்
கதைசுபோத் கோஸ்
திரைக்கதைபஞ்சு அருணாசலம் (வசனம்)
இசைஇளையராஜா
நடிப்புபாண்டியராஜன்
நிழல்கள் ரவி
ரேகா
ஒளிப்பதிவுஅசோக் குமார்
படத்தொகுப்புடி. கே. ராசன்
கலையகம்அப்பு மூவிசு
வெளியீடு4 செப்டம்பர் 1987 (1987-09-04)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தயாரிப்பு

உள்ளம் கவர்ந்த கள்வன், சிச்சோர் என்ற இந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். தூயவன் தயாரித்த கடைசித் திரைப்படமாகும். திரைப்படப் பணிகள் முடியும் நிலையில் இருந்தபோது, 1987 சூலை 11 அன்று அவர் இறந்தார்.[2]

பாடல்கள்

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3][4] கஃப்போசுட்டின் இராஜேஷ் இராஜாமணி, "நாடிருக்கும்" என்ற பாடலை ஒரு இணைவுப் பாடலாக உணர்கிறார்.[5] இப்பாடல் சங்கராபரணம் என்ற கர்நாடக ராகத்தில் அமைக்கப்பட்டது.[6]

பாடல்கள்
# பாடல்வரிகள்பாடகர்(கள்) நீளம்
1. "நாடிருக்கும் நிலமையில பாட்டு"  பஞ்சு அருணாசலம்பி. ஜெயச்சந்திரன் 4:30
2. "எம்மனச பறிகொடுத்து"  பஞ்சு அருணாசலம்பி. ஜெயச்சந்திரன் 4:27
3. "இதுக்குத்தான உம்மேல ஆசப்பட்டேன்"  பஞ்சு அருணாசலம்மலேசியா வாசுதேவன் 4:35
4. "காலங்காத்தாலே ஒரு பாடம்"  இளையராஜாகே. ஜே. யேசுதாஸ், கே. எஸ். சித்ரா 4:38
5. "தேனே செந்தேனே மானே"  பஞ்சு அருணாசலம்எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:18
6. "பூந்தென்றல் போகும் பாதை"   கே. எஸ். சித்ரா 4:29
மொத்த நீளம்:
26:57

வெளியீடும் வரவேற்பும்

உள்ளம் கவர்ந்த கள்வன் 1987 செப்டம்பர் 4 அன்று வெளியானது.[7] இந்தியன் எக்ஸ்பிரஸ் "எளிய மெல்லிய" கதையை விமர்சித்தது. ஆனால் அசோக் குமாரின் ஒளிப்பதிவை பாராட்டியது.[8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உள்ளம்_கவர்ந்த_கள்வன்&oldid=31070" இருந்து மீள்விக்கப்பட்டது