உயிரே உயிரே

உயிரே உயிரே (Uyire Uyire) என்பது தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தை ஏ. ராஜசேகர் இயக்கியுள்ளார். படமானது மூத்த நடிகை ஜெயபிரதா மற்றும் முன்னாள் அரசியல்வாதி அமர் சிங் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்தப் படமானது விக்ரம் குமாரின் 2012 ஆண்டைய வெற்றிப் படமான இஷ்க் என்ற தெலுங்கு படத்தின் மறு ஆக்கமாகும். இந்தப் படத்தில் பிரபல நடிகை ஜெயப்ரதாவின் மகனான சித்து, ஹன்சிகா மோட்வானி ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். படமானது 2016 ஏப்ரல் 1 அன்று வெளியாகி, ரசிகர்களிடம் மிகுதியான எதிர்மறை விமர்சனத்தைப் பெற்றது.[2]

உயிரே உயிரே
இயக்கம்ஏ. ராஜசேகர்
தயாரிப்புஜெயபிரதா
அமர் சிங்
கதைவிக்ரம் குமார்
இசைஅனூப் ரூபின்ஸ்
நடிப்புசித்து
ஹன்சிகா மோட்வானி
ஒளிப்பதிவுஆர். டி. ராஜசேகர்
படத்தொகுப்புசுராஜ் கவி
கலையகம்ஜெயப்பிரதா புரொடக்சன்ஸ்
ஸ்டுடியோ 9 மோஷன் பிக்சர்ஸ்
விநியோகம்ஈரோ இண்டர்நேசனல் [1]
வெளியீடுஏப்ரல் 1, 2016 (2016-04-01)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

நாயகன் ராகுல் (சித்து) மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். அதே விமானத்தில் பிரியாவும் (ஹன்சிகா) பயணிக்கிறார். இவரைப் பார்த்தவுடனே காதல் வயப்படுகிறார் ராகுல். விமானத்தில் அருகருகே உட்கார்ந்து பேசி கொண்டு வருகிறார்கள்.

சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானம், மழை, வெள்ளம் காரணமாக கோவாவில் தரையிறங்குகிறது. கோவாவில் ராகுலின் நண்பனுக்கு திருமணம் நடைபெற இருப்பதால், அங்கு பிரியாவை அழைத்து செல்கிறார். அங்கு நண்பர்களிடம் பிரியாவைத் தன்னுடைய மனைவி என்று அறிமுகம் செய்து வைக்கிறார்.

அன்று இரவு தனியாகக் கடற்கரையில் இருக்கும் பிரியாவை, ஒரு கும்பல் கற்பழிக்க முயற்சி செய்கிறது. இந்த கும்பலிடம் இருந்து பிரியாவைக் காப்பாற்றுகிறார் ராகுல். இதிலிருந்து பிரியாவுக்கு ராகுல் மீது காதல் ஏற்படுகிறது. இருவரும் காதலைச் சொல்லாமல் இருந்து வருகிறார்கள்.

ஒருவழியாகச் சென்னைக்கு வரும் இவர்கள், அங்கு பிரியாவிடம் தன் காதலைச் சொல்ல ராகுல் முயற்சி செய்கிறார். அப்போது, பிரியாவை அழைத்துச் செல்ல வரும் பிரியாவின் அண்ணன் சிவாவை (அஜய்) பார்த்தவுடன் அதிர்ந்து போகிறார். பிரியாவின் அண்ணன் சிவா, மூன்று வருடங்களுக்கு முன்பு, ராகுலின் அக்காவான திவ்யாவைக் (சாயாசிங்) காதல் என்ற பெயரில் துன்புறுத்தியதற்காக அவரை அடித்திருக்கிறார். இதனால் சிவாவுக்கும் ராகுலுக்கும் முன்பே பகை இருந்து வருகிறது.

ஒருகட்டத்தில் பிரியா ராகுல் மீது ஏற்பட்ட காதலை வெளிப்படுத்துகிறார். இந்த காதலுக்கு அவரது அண்ணன் சிவா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இறுதியில், சிவாவை எதிர்த்து பிரியாவும் ராகுலும் எவ்வாறு இணைந்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

தயாரிப்பு

விக்ரம் குமாரின் 2012 ஆண்டைய தெலுங்கு படமான இஷ்க் வெற்றியைத் தொடர்ந்து, பிரபல நடிகை ஜெயபிரதா இந்தப் படத்தின் தமிழ் மறு ஆக்க உரிமையைப் பெற்றார். 2012 சூனில் தனது மகன் சித்து இப்படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடிப்பார் என அறிவித்தார். இதற்கு முன்பு ஏ. ராஜசேகர் விசால் நடித்த இருமொழி படமான சத்தியம் என்ற படத்தை இயக்கினார்.[3] 2001 ஆம் ஆண்டில் கிளாஸ்மேட் என்ற பெயரிடப்பட்ட ஒரு இருமொழி படத்தில் சித்துவை கதாநாயகனாக அறிமுகம் செய்ய ஜெயப்பிரதா முயற்சித்தார். ஆனால் அந்த திரைப்படம் எடுக்கப்படவில்லை.[4] பின்னர் தெலுங்கு படமான தப்பாணா (2004) என்ற படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து சித்துவை முதன்மை பாத்திரத்தில் நடிக்கவைத்து அறிமுகப்படுத்தினார்.[5] உயிரை உயிரே படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க முதலில் நித்யா மேனன் அணுகப்பட்டார் ஆனால் பின்னர் ஹன்சிகா மோட்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[6][7]

2013 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் கோவாவில் மூன்று நாள் கால அட்டவணையில் ஹன்சிகா இடம் பெற்ற பாடல் காட்சிகளைப் படமாக்கியதுடன் படப்பிடிப்பு முடிவடைந்தது.[8] 2014 ஆம் ஆண்டு சனவரி 14 தைப்பொங்கலன்று படத்தின் முதல் சுவரொட்டி வெளியானது.[9]

மேற்கோள்கள்

  1. "Eros' 2016 lineup". indianexpress.com. http://indianexpress.com/article/entertainment/bollywood/eross-2016-line-up-has-over-65-films-in-multiple-languages/. பார்த்த நாள்: 25 January 2016. 
  2. "'Uyire Uyire'movie review round up:Critics give a thumbs down to Hansika Motwani starrer". ibtimes. http://www.ibtimes.co.in/news/entertainment/kollywood/2016/04/01/uyire-uyire-review-round-critics-give-thumbs-down-hansika-motwani-starrer-672955. பார்த்த நாள்: 5 April 2016. 
  3. "Jayaprada to remake 'Ishq' in Tamil?". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-06-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130625021345/http://articles.timesofindia.indiatimes.com/2012-07-03/news-interviews/32509456_1_ishq-jayaprada-tamil. பார்த்த நாள்: 15 January 2014. 
  4. https://web.archive.org/web/20040307113118/http://www.chennaionline.com/entertainment/filmplus/nfilm.asp
  5. http://www.idlebrain.com/movie/archive/mr-tapana.html
  6. "One More Hit Remake For Hansika - Hansika - Ishq - Tamil Movie News - Behindwoods.com". Behindwoods. http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-03/hansika-ishq-17-09-12.html. பார்த்த நாள்: 15 January 2014. 
  7. "Famous Actress To Remake Vikram Film - Jaya Prada - Vikram - Tamil Movie News - Behindwoods.com". Behindwoods. http://behindwoods.com/tamil-movie-news-1/jun-12-04/jaya-prada-vikram-28-06-12.html. பார்த்த நாள்: 15 January 2014. 
  8. "Hansika is happy being a busy bee!". Sify. http://www.sify.com/movies/hansika-is-happy-being-a-busy-bee-news-tamil-nmdl5zccbeb.html. பார்த்த நாள்: 15 January 2014. 
  9. "Uyire Uyire – Movie Posters". kollytalk.com இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116105738/http://kollytalk.com/posters/uyire-uyire/uyire-uyire-104219.html/attachment/uyire-uyire-2. பார்த்த நாள்: 15 January 2014. 
"https://tamilar.wiki/index.php?title=உயிரே_உயிரே&oldid=31025" இருந்து மீள்விக்கப்பட்டது