உம்பூல் கோயில், மத்திய ஜாவா

உம்பூல் கோயில் (Umbul Temple) இந்தோனேசியாவில் உள்ள மதாராம் காலத்திய இந்துக் கோயிலாகும். அக்கோயில் மத்திய ஜகார்த்தாவில் மெக்லாங்கில் கிராபாக் என்னுமிடத்தில் உள்ள கார்ட்டோகர்ஜாவில் அமைந்துள்ளது. அது இரண்டு குளங்களைச் சுற்றி பல கற்கள் அமைக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது.அந்தக் குளத்திற்கான தண்ணீர் அங்கு ஊற்றிலிருந்து வருகிறது. கி.பி.9ஆம் நூற்றாண்டில் இக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது மதாராம் மன்னருக்கு குளிக்கும் இடமாகவும், ஓய்வு எடுக்கின்ற இடமாகவும் பயன்பட்டு வந்தது. 11ஆம் நூற்றாண்டில் இது கவனிப்பாராட்டு விடப்பட்டது. பின்னர் மறுபடியும் 19ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோயில் வளாகம் இந்தோனேசியாவின் பண்பாட்டுச் சொத்தாகக் கருதப்படுகிறது.[1] சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து பார்வையிடவும், குளிக்கவும் வசதிகள் உள்ளன.

உம்பூல் கோயிலில் குளிக்கும் இடம்

விளக்கம்

உம்பூல் கோயில் வளாகம் இரண்டு செவ்வக வடிவிலான குளிக்கும் பகுதியினைக் கொண்டு அமைந்துள்ளது. மேலுள்ள குளம் பெரிதாக உள்ளது. அது 7.15 மீட்டர் (23.5 அடி) அகலத்தையும், 12.5 மீட்டர் (41.0 அடி) நீளத்தையும் கொண்டு அமைந்துள்ளது. அடுத்து அமைந்துள்ள குளம் சிறிதாக உள்ளது. அது 7.0 மீட்டர் (23.0 அடி) அகலத்தையும், 8.5 மீட்டர் (28.0 அடி) நீளத்தையும் கொண்டு அமைந்துள்ளது. இதமான தண்ணீர் அங்கு ஊற்றிலிருந்து வந்த வண்ணம் உள்ளது. அது பெரிய குளத்திலிருந்து சிறிய குளத்திலிருந்து 2 மீ (6 அடி 7 அங்குலம்) அளவுள்ள நீண்ட தண்ணீர்க் குழாய் மூலமாக வருகிறது.[2][3]

குளங்களைச் சுற்றி ஒரு தோட்டம் உள்ளது. [4] அத்துடன் பல்வேறு வகையான கற்கள் உள்ளன, அவற்றில் சில லிங்கம் மற்றும் யோனி வடிவத்தில் அமைந்து காணப்படுகின்றன. 1876 ஆம் ஆண்டில், டச்சு அறிஞர் ஆர்.எச்.டி ஃப்ரீடெரிச் அந்த இடத்தில் இரண்டு கோயில்கள் இருந்திருக்கலாம் என்று முன்மொழிந்தார், இருப்பினும் அதற்கான எந்த தளங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. [3] இரண்டு கோயில்களைப் பற்றிய அவரது முன்மொழிவு அங்கு காணப்பட்ட கற்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் ஆகியவற்றின் மூலமாக உறுதி செய்யப்படுகிறது, அவை ஒரே கோயிலின் பகுதியாக இல்லை என்பதை அது உணர்த்துகின்றது.. குளியல் குளத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு அசல் சுவர் சுமார் 20 மீ (66 அடி) அளவில் உள்ளது.

உம்பூலில் மத சிற்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [5] கண்டுபிடிக்கப்பட்ட சிற்பங்களில் இரண்டு விநாயகர் சிற்பங்கள், இரண்டு துர்க்கை சிற்பங்கள், ஒரு அகத்தியர் சிற்பம் ஆகியவை அடங்கும். 1923 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்போது ஒரு மனித உடலுடன் கூடிய ஒரு கருட சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டதாக என்.ஜே. கிரோம் கூறுகின்றார். [6]

அமைவிடம் மற்றும் வரலாறு

 
கோயிலில் கற்கள்

உம்பூல் இந்தோனேசியாவில் மத்திய ஜாவாவில் மெக்லாங்கில் கிராபாக் என்னுமிடத்தில் உள்ள கார்ட்டோகர்ஜாவில் அமைந்துள்ளது. [4] இவ்விடம் மலைகளால் சூழப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 550 மீ (1,800 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. [3] எலோ நதியைச் சுற்றி அமைந்துள்ள பதினொரு கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்; [3] உம்பூல் நீர்வழிப்பாதையின் தெற்கே 50 மீ (160 அடி) தொலைவில் அமைந்துள்ளது. [3] உம்புல் இப்பகுதியில் உள்ள நீர் தொடர்பான பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும், இது சேகர் லாங்கிட் நீர்வீழ்ச்சி மற்றும் தெலாகா பிளெடர் ஆகியவற்றின் தாயகமாக அமைந்துள்ளது. [2] இந்த கோயிலுக்கு ஏர் பனாஸ் மற்றும் கேண்டி பனாஸ் உள்ளிட்ட பல பெயர்கள் உண்டு. [3] மேலும் அதன் நீர் தோல் நோய்களைக் குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. [2]

குறிப்புகள்

  1. "Cultural properties of Indonesia", Wikipedia (in English), 2019-11-18, retrieved 2019-11-30
  2. 2.0 2.1 2.2 Tribun 2014, Menikmati.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Degroot 2009.
  4. 4.0 4.1 Jauhary 2013, Magelang.
  5. Degroot 2009, ப. 121.
  6. Degroot 2009, ப. 343.

மேற்கோள் நூல்கள்