உமையாள்புரம் கே. சிவராமன்

உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் (பி. டிசம்பர் 17, 1935), ஒரு மிருதங்க வாசிப்பாளர், அறிஞர். இந்தியக் குடியரசின் படைத்துறை-சாராத விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசண் விருதை 2010-ஆம் ஆண்டு பெற்றார்; அவருக்கு கலைத்துறையில் இவ்விருது அளிக்கப்பட்டது. அருபதி நடேசன், தஞ்சாவூர் வைத்தியநாதன், பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், கும்பகோணம் ரங்கு ஆகியோரிடம் இவர் இசைப்பயிற்சி பெற்றார். சிவராமன் தனது பத்தாவது வயதில் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். மிருதங்க வாசிப்பில் புதிய உத்திகள், புதுமைகளைப் புகுத்தியவர்; வட இந்திய இசைக்கலைஞர்களுடன் ஜுகல்பந்தி என்ற நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியவர்.

உமையாள்புரம் கே. சிவராமன்
உமையாள்புரம் கே. சிவராமன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
உமையாள்புரம் கே. சிவராமன்
பிறந்ததிகதி டிசம்பர் 17, 1935
அறியப்படுவது மிருதங்க
வாசிப்பாளர்

ஆராய்ச்சி, புதுமை

சிவராமன் மிருதங்கக் கலையில் மூல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மிருதங்க வாசிப்பில் பல நுணுக்கங்களையும் பிறர் அறிந்திட வகுப்புகளும் எடுத்து வருபவர். முதன்முதல் இழைக்கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட மிருதங்கத்தை அறிமுகப்படுத்திய இவர், பதனிட்ட தோல், பதனிடாத தோல் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மிருதங்கங்களை தனித்தனியே ஆராய்ச்சி செய்துள்ளார். மிருதங்க வாசிப்பில் கிடைக்கும் வெவ்வேறு மேற்சுரங்களுக்கு மிருதங்கத்தில் உள்ள கருந்திட்டுப் பகுதி எவ்வாறு காரணமாயுள்ளது என்று ஆய்வு செய்துள்ளார்.

விருதுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்