உமா குமரன்¨

உமா குமரன் (Uma Kumaran) என்பவர் பிரித்தானிய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தொழிற் கட்சி உறுப்பினரான இவர் இசுட்ராட்ஃபோர்டு-போ தொகுதியை சூலை 2024 முதல் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

உமா குமரன்
நா.உ
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
5 சூலை 2024
தொகுதி இசுட்ராட்ஃபோர்டு-போ
தனிநபர் தகவல்
பிறப்பு உமா குமரன்
இலண்டன், ஐக்கிய இராச்சியம்
அரசியல் கட்சி தொழிற் கட்சி
படித்த கல்வி நிறுவனங்கள் இலண்டன் குயீன் மேரி பல்கலைக்கழகம்
இணையம் www.umakumaran.co.uk

தொடக்க வாழ்க்கை

உமா குமரன் இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு கிழக்கு இலண்டனில் பிறந்தார்.[1][2] இலங்கை உள்நாட்டுப் போரில் புலம் பெயர்ந்து இலண்டன் வந்து சேர்ந்த இவரது பெற்றோருக்கு, அவர்களது குடியேற்ற வழக்கில் தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செரமி கோர்பின் உதவி செய்தார்.[3] இவரது குடும்பம் பின்னர் ஹரோ நகருக்கு இடம்பெயர்ந்தது, அங்கு உமா பென்ட்லி வுட் உயர் பாடசாலையிலும், செயிண்ட் டொமினிக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5] பின்னர் அவர் இலண்டன் குயீன் மேரி பல்கலைக்கழகத்தில் அரசியலில் இளங்கலைப் பட்டத்தையும், முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.[3][6]

பணி

உமா குமரன் மார்ச் 2009 முதல் ஆகத்து 2010 வரை தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் பட்லரின் நாடாளுமன்ற ஆய்வாளராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.[5][7][8] செப்டம்பர் 2010 முதல் திசம்பர் 2014 வரை இசுலிங்டன் நகரசபையில் தொழிற்கட்சிக் குழுவில் பணியாற்றினார்.[5][9] அவர் சாதிக் கானின் மூத்த பரப்புரை ஆலோசகராகவும் (மே 2015 முதல் அக்டோபர் 2015 வரை), உள்ளூராட்சி சங்கத்தில் (அக்டோபர் 2015 முதல் நவம்பர் 2017 வரை) அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.[6][10] பின்னர் நவம்பர் 2017 முதல் ஆகத்து 2020 வரை லண்டன் நகர முதல்வர் சாதிக் கானின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார்.[6][11] செப்டம்பர் 2020 முதல் மார்ச் 2022 வரை தொழிற்கட்சித் தலைவர் கீர் இசுட்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராகப் பணியாற்றினார்.[6][12] ஏப்ரல் 2022 முதல் மே 2024 வரை சி40 நகரங்களின் காலநிலைத் தலைமைக் குழுவிற்கான வெளியுறவு மற்றும் பன்னாட்டு உறவுகளின் இயக்குநராக இருந்தார்.[6][13][14]

அரசியலில்

உமா குமரன் 2010 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களில் லண்டன் பரோ ஆஃப் ஹாரோ தொகுதியில் தொழிற் கட்சி கட்சி வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிட்டார், ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[15] நவம்பர் 2013 இல், ஹாரோ கிழக்கில் அதன் வேட்பாளராக தொழிற் கட்சியால் உமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][16] 2015 பொதுத் தேர்தல் பரப்புரையின்போது, ​உமாவும் லிபரல் டெமக்கிராட்சு வேட்பாளரும், பழமைவாதக் கட்சியின் உறுப்பினர் முக்கேஷ் நாக்கர் என்பவரால் நிறுவப்பட்ட தர்ம சேவா பூர்வபட்சா என்ற அமைப்பால் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டத்திற்கு 2013 இல் ஆதரவளித்தமைக்காகத் தாக்கப்பட்டனர்.[17][18][19] 2015 பொதுத்தேர்தலில் உமா குமரன் தோற்கடிக்கப்பட்டார்.[20][21] மே 2024 இல், புதிதாக உருவாக்கப்பட்ட இசுட்ராட்ஃபோர்ட்-போ தொகுதியில் தொழிற்கட்சியின் வேட்பாளராக உமா குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[22][23] 2024 பொதுத்தேர்தலில் உமா 11,634 வாக்குகள் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[24][25]

தேர்தல் வரலாறு

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2010 உள்ளாட்சி[26] ஹரோ தொழிற் கட்சி தெரிவு செய்யப்படவில்லை
2015 பொதுத்தேர்தல்[27][28] ஹரோ கிழக்கு தொழிற் கட்சி தெரிவு செயப்படவில்லை
2024 பொதுத் தேர்தல்[24] இசுட்ராட்ஃபோர்டு மற்றும் போ தொழிற் கட்சி தெரிவு

மேற்கோள்கள்

  1. "Expecting to benefit from desire for change". The Jewish Chronicle (London, UK) இம் மூலத்தில் இருந்து 2 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240602035448/https://www.thejc.com/news/expecting-to-benet-from-desire-for-change-dqx1hyox. 
  2. "Talk at the Cafe Spectator: Lankan-origin Britons enter election fray in UK". The Sunday Times (Sri Lanka) (Colombo, Sri Lanka). 23 June 2024. https://www.sundaytimes.lk/240623/columns/a-common-tamil-candidate-jaishankar-tells-tamil-parties-he-has-nothing-to-say-561774.html. 
  3. 3.0 3.1 "A Daughter Of Sri Lankan Tamil To Contest For Labour Party In Harrow East". கொழும்பு டெலிகிராஃபு. 18 October 2013 இம் மூலத்தில் இருந்து 28 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220528173257/https://www.colombotelegraph.com/index.php/a-daughter-of-sri-lankan-tamil-to-contest-for-labour-party-in-harrow-east/. 
  4. "About Labour: Labour people - Labour's Candidates - Harrow East, Uma Kumaran". London, UK: தொழிற் கட்சி இம் மூலத்தில் இருந்து 22 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150422013016/https://www.labour.org.uk/harrow-east-uma-kumaran. 
  5. 5.0 5.1 5.2 5.3 Shammas, John (18 November 2013). "'We are a success story of multicultural Britain': Labour select Uma Kumaran as Harrow East 2015 candidate". MyLondon (London, UK) இம் மூலத்தில் இருந்து 1 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201201205713/https://www.mylondon.news/incoming/we-success-story-modern-multicultural-6315052. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Garfinkel, Imogen (19 June 2024). "Labour candidate Uma Kumaran on a Gaza ceasefire, the NHS and the Grenfell fire". London, UK: Roman Road London இம் மூலத்தில் இருந்து 20 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240620075007/https://romanroadlondon.com/uma-kumaran-labour-party-candidate-stratford-bow-interview/. 
  7. "Register of Interests of Members' Secretaries and Research Assistants (as at 12 April 2010)". London, Uk: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம். p. 40 இம் மூலத்தில் இருந்து 23 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100423161215/http://www.publications.parliament.uk/pa/cm/cmsecret/100412/100412.pdf. 
  8. Shoffman, Marc (23 April 2015). "Countdown to Election Day! Meet the candidates: Harrow East". Jewish News (London, UK) இம் மூலத்தில் இருந்து 31 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240531235037/https://www.jewishnews.co.uk/countdown-to-election-day-meet-the-candidates-harrow-east/. 
  9. Morgan, Ben (8 May 2015). "Harrow East election result: Tory Bob Blackman doubles majority to retain seat". Evening Standard (London, UK) இம் மூலத்தில் இருந்து 25 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200325035144/https://www.standard.co.uk/news/politics/harrow-east-election-result-tory-bob-blackman-doubles-majority-to-retain-seat-10234545.html. 
  10. Gallagher, Paul (21 April 2017). "Uma Kumaran: 'I can't stand – last time the Tories dragged the campaign into the gutter'". i (newspaper) (London, UK) இம் மூலத்தில் இருந்து 2 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240602015711/https://inews.co.uk/news/politics/general-election-2017-harrow-east-labour-candidate-60618. 
  11. "LGA Labour Group Annual Report 2018". London, UK: LGA Labour Group. p. 2 இம் மூலத்தில் இருந்து 10 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240610184548/https://www.local.gov.uk/sites/default/files/documents/LGA%20Labour%20Group%20Annual%20Report%20FINAL.pdf. 
  12. "2024 – General Election – Week 3". London, UK: JBP Associates. 11 June 2024. https://www.jbp.co.uk/2024-general-election-week-3/. 
  13. "Our Team". London, UK: C40 Cities Climate Leadership Group இம் மூலத்தில் இருந்து 30 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230830113714/https://www.c40.org/our-team/page/16/. 
  14. Harpin, Lee (20 May 2024). "Jewish Labour activist seeks to stand for Party in Corbyn's current seat". Jewish News (London, UK) இம் மூலத்தில் இருந்து 20 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240520132644/https://www.jewishnews.co.uk/jewish-labour-activist-seeks-to-stand-for-labour-in-jeremy-corbyns-current-seat/. 
  15. "Pinner South Ward — Harrow". Local Elections Archive Project இம் மூலத்தில் இருந்து 28 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211128084808/https://www.andrewteale.me.uk/leap/ward/189/. 
  16. Thain, Bruce (18 November 2013). "Uma Kumaran selected as Labour's Harrow East candidate". Harrow Times (Watford, UK). https://www.harrowtimes.co.uk/news/10816917.uma-kumaran-selected-as-labours-harrow-east-candidate/. 
  17. "Uma Kumaran: Political Personality". Asian Voice. 29 May 2017 இம் மூலத்தில் இருந்து 24 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210924190824/https://www.asian-voice.com/Volumes/2017/3-June-2017/Uma-Kumaran-Political-Personality. 
  18. Hundal, Sunny (10 December 2019). "The campaigns trying to turn British Indians against each other". openDemocracy (London, UK) இம் மூலத்தில் இருந்து 16 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240116231309/https://www.opendemocracy.net/en/opendemocracyuk/campaigns-trying-turn-british-indians-against-each-other/. 
  19. Oliphant, Victoria (6 May 2015). "Labour candidate Uma Kumaran condemns Dharma Sewa Purvapaksha leaflet as 'gutter politics'". Harrow Times (Watford, UK). https://www.harrowtimes.co.uk/news/12933345.labour-candidate-uma-kumaran-condemns-dharma-sewa-purvapaksha-leaflet-as-gutter-politics/. 
  20. "Election 2015: Bob Blackman fends off Labour challenge in Harrow East". The Jewish Chronicle (London, UK) இம் மூலத்தில் இருந்து 4 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240304131122/https://www.thejc.com/news/election-2015-bob-blackman-fends-off-labour-challenge-in-harrow-east-opzmyqn4. 
  21. de Silva, Neville (11 May 2015). "UK election brings sweet music to Lankan ears". Daily FT (Colombo, Sri Lanka). https://www.ft.lk/article/417789/UK-election-brings-sweet-music-to-Lankan-ears. 
  22. Aletha Adu; Mason, Rowena; Courea, Eleni (31 May 2024). "Diane Abbott free to stand for Labour in election, says Starmer". தி கார்டியன் (London, UK) இம் மூலத்தில் இருந்து 9 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240609213927/https://www.theguardian.com/politics/article/2024/may/31/diane-abbott-free-to-stand-for-labour-in-election-says-starmer. 
  23. "East Ham, Stratford and Bow and West Ham and Beckton Parliamentary candidates chosen". London, UK: Newham Labour. 8 June 2024. https://www.newhamlabour.org/2024/06/08/east-ham-stratford-and-bow-and-west-ham-and-beckton-parliamentary-candidates-chosen/. 
  24. 24.0 24.1 "Election 2024: Stratford and Bow results". BBC News (London, UK). https://www.bbc.co.uk/news/election/2024/uk/constituencies/E14001525. 
  25. "Uma Kumaran elected as MP for Stratford and Bow, Stephen Timms elected as MP for East Ham, and James Asser elected as MP for West Ham and Beckton". Newham, UK: Newham London Borough Council இம் மூலத்தில் இருந்து 5 July 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240705225426/https://www.newham.gov.uk/news/article/1283/uma-kumaran-elected-as-mp-for-stratford-and-bow-stephen-timms-elected-as-mp-for-east-ham-and-james-asser-elected-as-mp-for-west-ham-and-beckton. 
  26. "Election results for Pinner South: Borough Election - Thursday 6 May 2010". Harrow, UK: Harrow London Borough Council. 6 May 2010. https://moderngov.harrow.gov.uk/mgElectionAreaResults.aspx?ID=19. 
  27. "Election results for Harrow East: Parliamentary Election - Thursday 7 May 2015". Harrow, UK: Harrow London Borough Council. 7 May 2015 இம் மூலத்தில் இருந்து 5 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220705181105/https://moderngov.harrow.gov.uk/mgElectionAreaResults.aspx?ID=112. 
  28. "Election history: 2015 General Election - Harrow East". London, UK: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம். https://members.parliament.uk/constituency/3517/election/369. 
"https://tamilar.wiki/index.php?title=உமா_குமரன்¨&oldid=23888" இருந்து மீள்விக்கப்பட்டது