உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில்

(உத்தமசோழபுரம் கரபுரநாதசுவாமி கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கரபுரநாதசுவாமி கோயில் (Karapuranathar Temple) என்பது தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இத்தலத்தின் மூலவர் கரபுநாதர், அம்பிகை பெரியநாயகியம்மன்.

கரபுரநாதசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சேலம் மாவட்டம்
அமைவு:உத்தமசோழபுரம்
ஆள்கூறுகள்:11°36′44″N 78°06′12″E / 11.612326°N 78.103402°E / 11.612326; 78.103402
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்தியா, கோயில்

தலவரலாறு

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கரதூசனன் என்பவர் இராவணனின் சகோதரன் ஆவார். இவர் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்தும் இறைவன் தரிசனம் தராததால், அக்னிபிரவேசம் செய்ய துணிந்தார். அப்போது அங்கு ஈசன் வெளிப்பட்டார். கரதூசன் பூசை செய்தமையால் சிவபெருமான் கரபுரநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

கோயில் அமைப்பு

இக்கோயிலில் கரபுரநாதசுவாமி, பெரியநாயகி சன்னதிகளும், விநாயகர், முருகன், ஐயப்பன், கரடி சித்தர், கால பைரவர், சூரியன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காரணாகம முறைப்படி மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் தேர்த்திருவிழா 6-ம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவம் 9-ம் நாள் திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. சன்னதிகள்

இக்கோயிலில் கரடி சித்தருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. கன்னி மூலை கணபதி, வள்ளி தெய்வானை முருகன், ஐயப்பன் போன்றோர் சன்னதிகள் உள்ளன.[3] தலசிறப்பு

தலசிறப்பு

  • அங்கவை சங்கவை திருமணம் நடைபெற்ற தலம்
  • மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் கொடிகள் அர்த்த மண்டபத்தில் கல்தூணில் பதியப்பட்டுள்ளது,
  • இக்கோயிலில் ஔவையாருக்கு பெரிய சிலை அமைந்துள்ளது
  • குணசீலன் எனும் சிறுவனுக்காக மூலவர் சற்று சாய்ந்த நிலையில் அமைந்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 72
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  3. ஆன்மிகம் இதழ் 1-15 ஜூலை 2016 பக்கம் 74