உத்தண்ட கணபதி

உத்தண்ட கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 24வது திருவுருவம் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்வநீதி என்னும் நூலில் காணப்படும் உத்தண்ட கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு

நீலம், தாமரை, மாதுளம் பழம், கதை, தந்தம், கரும்புவில், இரத்தினகலசம், பாசம், நெற்கதிர், மாலை இவற்றை ஏந்திய பத்துக்கைகளை உடையவர். அழகிய தாமரைப் பூவை ஏந்திய பச்சை மேனியளாகிய தேவியால் தழுவப்பெற்றவர்.

"https://tamilar.wiki/index.php?title=உத்தண்ட_கணபதி&oldid=132988" இருந்து மீள்விக்கப்பட்டது