உதாத்தவணி
உதாத்தவணி அல்லது உதாத்த அணி என்பது செல்வ மிகுதியையும் மேம்பட்ட உள்ளத்தின் மிகுதியையும் வியந்து கூறுவது எனப்படும்.
குறிப்பு
- "வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
- உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்." என்கிறது தண்டியலங்காரம் 52-ஆவது பாடல்.
வகைகள்
உதாத்தவணி பின்குறிப்பிட்டவாறு இருவகைப்படும்:
- செல்வ மிகுதியைக்கூறுவது "செல்வமிகுதி உதாத்தவணி"
- உள்ளத்தின் உயர்வினை வியந்து கூறுவது "உள்ள மிகுதி உதாத்தவணி"
வேறு பெயர்கள்
உள்ள மிகுதி உதாத்தவணியினை வீறுகோளணி என்றும் அழைப்பர்.