உதகை பேருந்து நிலையம்
உதகை பேருந்து நிலையம் (Ooty Bus Stand) ஊட்டி நகரத்தில் அமைந்துள்ள ஒரு பேருந்து நிலையமாகும். இதை உதகமண்டலம் மத்தியப் பேருந்து நிலையம் என்றும் அழைப்பார்கள். குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலுர் நகரங்களில் பேருந்து நிலையங்கள் இருந்தாலும் நீலகிரி மாவட்டத்திற்கான முதன்மை பேருந்து நிலையமாக உதகை பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.
உதகமண்டலம் மத்தியப் பேருந்து நிலையம் Udhagamandalam Central Bus Stand | |
---|---|
பேருந்து நிலையம் | |
பொது தகவல்கள் | |
அமைவிடம் | காத்தாடிமட்டம், ஊட்டி தமிழ்நாடு இந்தியா |
ஆள்கூறுகள் | 11°24′13″N 76°41′47″E / 11.4035°N 76.6963°ECoordinates: 11°24′13″N 76°41′47″E / 11.4035°N 76.6963°E |
ஏற்றம் | 2210 அடிகள் |
உரிமம் | தமிழ்நாடு அரசு |
இயக்குபவர் | த.நா.போ.க. கோயம்பத்தூர் |
நடைமேடை | 10 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | ஆம் |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | கியூ.டி.ஒய் |
பயணக்கட்டண வலயம் | தமிழ்நாடு போக்குவரத்துத் துறை |
அமைவிடம்
உதகமண்டலம் இரயில்நிலையத்திற்கு அருகாமையில் உதகை பேருந்து நிலையம் அமைந்துள்ளது [1]. பேருந்து நிலையத்தின் நிலப்பகுதி முதலில் ஊட்டி ஏரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பின்னர் பேருந்து நிலையம் இங்கு கட்டியெழுப்பப்பட்டது [2].
பேருந்து நிலைய சேவைகள்
மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள மற்ற நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் தங்கி புறப்பட்டுச் செல்ல இங்கு 10 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், சென்னை கோட்டங்களைச் சேர்ந்த மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் இங்கிருந்து புறப்படுகின்றன [3][4]. இவற்றைத் தவிர கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தைச் (பெங்களூரு, மைசூர், மெர்காரா, ஆசன் சேர்ந்த பேருந்துகளும் [5][6][7], கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தைச் (சுல்தான் பத்தேரி, கண்ணூர், மலப்புறம்) சேர்ந்த பேருந்துகளும் உதகை பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன [8]. பேருந்து நிலையத்தில் பயணப் பொருள்கள் வைப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குள் தனியார் சேவைகள் ஏதும் அனுமதிக்கப்படுவதில்லை [9].
கிடங்குகள்
உதகை பேருந்து நிலையத்திற்கு தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழக –ஊட்டி பிராந்திய அலுவலகம் மற்றும் இப்போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான ஊட்டி-1, ஊட்டி-2 என்ற கிடங்குகளும் உள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "TOURIST SPOTS - OOTY". Incredible Tamilnadu. Archived from the original on 22 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
- ↑ "Places to stay in Nilgiri Hills". upasikvk.org. Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 30 September 2011.
- ↑ R. Y. Narayanan (7 May 2002). "Reaching Ooty — an uphill task". பிசினஸ் லைன். http://www.thehindubusinessline.in/2002/05/07/stories/2002050702541700.htm. பார்த்த நாள்: 25 January 2014.
- ↑ D. Radhakrishnan (26 June 2006). "Town bus stand in Udhagamandalam waiting for a facelift". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140204013349/http://www.hindu.com/2006/06/26/stories/2006062603770300.htm. பார்த்த நாள்: 25 January 2014.
- ↑ "Bus service to Ooty". தி இந்து. 10 February 2008 இம் மூலத்தில் இருந்து 14 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080214080211/http://www.hindu.com/2008/02/10/stories/2008021057120300.htm. பார்த்த நாள்: 25 January 2014.
- ↑ "Services to Ooty from Bengaluru" (PDF). Karnataka State Road Transport Corporation. Archived from the original (PDF) on 1 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Fly-bus to connect BIA to Mysore". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 June 2013. http://www.newindianexpress.com/cities/bangalore/Fly-bus-to-connect-BIA-to-Mysore/2013/06/03/article1617609.ece. பார்த்த நாள்: 25 January 2014.
- ↑ "Demand to resume KSRTC service to Ooty". தி இந்து. 5 June 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/demand-to-resume-ksrtc-service-to-ooty/article3492130.ece. பார்த்த நாள்: 25 January 2014.
- ↑ "No pvt bus service in Ooty: Nehru". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 14 May 2012. http://www.newindianexpress.com/states/tamil_nadu/article15848.ece. பார்த்த நாள்: 25 January 2014.