ஈசுர கீதை

ஈசுரகீதை என்பது தத்துவராயர் பாடிய நூல்களில் ஒன்று. கண்ணன் புகழைச் சொல்வது பகவத் கீதை. இந்த நூல் ஈசிவரனின் புகழைக் கூறுவதால் ஈசுரக்கீதை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை இவரது ஆசிரியர் சொரூபானந்தர் பாராட்டிச் ‘சிவப்பிரகாசம்’ என்னும் பெயரையும் சூட்டியுள்ளார்.

வடமொழி ஈசுரகீதை

வடமொழியில் ஈசுரகீதை என்னும் பெயருடன் ஒரு நூல் உள்ளது. இதனைச் சிவாக்கிர யோகிகள் என்பவர் தமது நூல் கூர்ம புராணம் உத்தர காண்டத்தில் 112 அத்தியாயங்களில் வடமொழியில் பாடியுள்ளார். இதனைத் தத்துவராயர் தமிழில் பாடிய நூல் இது.

ஒப்புநோக்கம்

தமிழ்நூலின் பாங்குகள்

  • இது 11 தலைப்புகளில் 338 பாடல்களைக் கொண்டது.
  • இது வேதாந்த நூல். என்றாலும் தென்னாடுடைய சிவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டுள்ளது.
  • நூல் நல்ல தமிழில் உள்ளது.
  • வருணனை என்னும் சொல்லை இந்நூல் ‘வர்ணனம்’ எனத் தலைப்புகளின் பெயராக வழங்குகிறது. ‘ஜே’ என்னும் சொல்லைத் திருவாசகம் சிவபுராணத்தைப் பின்பற்றி ‘வெல்க’ என வழங்குகிறது.

எடுத்துக்காட்டு

வெல்க பூதபதி வெல்க சீவபதி
வெல்க யோகபதி வெல்கவே

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. கண்ணன் கூற்று என்பது ஐதிகம்.
"https://tamilar.wiki/index.php?title=ஈசுர_கீதை&oldid=16292" இருந்து மீள்விக்கப்பட்டது