இளம்பூதனார்

இளம்பூதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகைத் தொகுப்பில் பாடல் எண் 334 ஆக வைக்கப்பட்டுள்ளது.

பாடல் தரும் செய்தி

அவனுக்கும் அவளுக்கும் உறவு. அவன் திருமணத்தைத் தள்ளி வைக்க விரும்புகிறான். அதனைத் தாங்கிக்கொள்வாயா என்று அவளைத் தோழி கேட்கிறாள். தன்னால் தாங்கமுடியாது என்பதை அவள் நயமாகச் சொல்லும் பாடல் இது.

கடற்காக்கை பனிக்காலத்தைப் புலக்கும்(வெறுக்கும்) என்றாலும் பொறுத்துக்கொண்டு உயிர் வாழும். அதுதான் என் நிலைமை. அவன் திருமணம் செய்துகொள்ளாமல் என்னை விட்டுவிட்டால் நாம் இழக்கப்போவது நம் உயிரைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

சிறுவெண்காக்கை

கடற்காக்கையைக் (seagull) குறிக்கும் சொல் இது. இந்தக் காக்கை சிறிதாக இருக்கும். வெள்ளையாக இருக்கும். சிவந்த வாயினைக் கொண்டது. பொருந்தோடாக (பெருங் கூட்டமாக) வாழும். பனிக்காலத்தில் பெரிதும் அவதிப்படும்.

"https://tamilar.wiki/index.php?title=இளம்பூதனார்&oldid=12316" இருந்து மீள்விக்கப்பட்டது