இளங்கோவடிகள் விருது
இளங்கோவடிகள் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2015 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பி வருபவருக்கோ இந்த விருது அளிக்கப்படுகிறது.[1] இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.
விருது பெற்றவர்கள் பட்டியல்
வரிசை எண் | விருது பெற்றவர் பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு |
---|---|---|
1 | முனைவர் ஜி. டி. நிர்மலா மோகன் | 2015 |
2 | நா. நஞ்சுண்டன் | 2016 |
2 | முனைவர் வெ. நல்லதம்பி | 2017 |
2 | சிலம்பொலி சு. செல்லப்பன் | 2018 |
2 | கவிக்கோ ஞானச்செல்வன் (எ) கோ. திருஞானசம்பந்தம்[2] | 2019 |
மேற்கோள்கள்
- ↑ Correspondent, Vikatan. "இளங்கோவடிகள், தமிழ்ச் செம்மல் விருது: ஜெயலலிதா அறிவிப்பு" (in ta). https://www.vikatan.com/government-and-politics/politics/30577-.
- ↑ "தமிழ் புத்தாண்டு விருது பெறுவோர் பட்டியல்தமிழக அரசு வெளியிட்டது". 2020-01-15. http://www.dailythanthi.com/News/State/2020/01/15011406/List-of-Tamil-New-Year-Award-recipientsPublished-by.vpf.
புற இணைப்புகள்
- தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தளம் இளங்கோவடிகள் விருது பெற்றவர்கள்