இலாவண்யா சுந்தரராமன்

இலாவண்யா சுந்தரராமன் (Lavanya Sundararaman) ஓர் கர்நாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் பூர்ணபிராக்யா ராவிடம் ஆரம்பப் பயிற்சியைப் பெற்றார். மேலும் இவரது இசைக்கலைஞர்களின் குடும்பத்திலிருந்தும் பயிற்சி பெற்றார்.

இலாவண்யா சுந்தரராமன்
இலாவண்யா சுந்தரராமன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
இலாவண்யா சுந்தரராமன்
பணி பாடகர்
வகை கருநாடக இசை
செயற்பட்ட ஆண்டுகள் 2000 – நடப்பு
செயற்பட்ட ஆண்டுகள் 2000 – நடப்பு

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்

இலாவண்யா காயத்ரி, டாக்டர் ஆர். சுந்தரராமன் இணையருக்குப் பிறந்தார். இவர் பிரபல கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாளின் பேத்தி ஆவார். மிருதங்கம் சக்ரவர்த்தி பால்காட் மணி ஐயரின் பேத்தியும் ஆவார் . இலாவண்யா தனது குழந்தைப் பருவத்தில் தனது பாட்டி டி. கே. பட்டம்மாளிடம் இருந்து இசைப் பாடங்களைப் பெற்றார். டி. கே. பட்டம்மாள், பிரபல பாடகி லலிதா சிவகுமார், இவரது தாயார் காயத்திரி சுந்தரராமன், இவரது அத்தையும் புகழ்பெற்ற பாடகியுமான நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோரின் சீடர் ஆவார்.[1][2]

இவர் இராணி மேரிக் கல்லூரி, சென்னையில் இளங்கலையும், முதுகலையும் முடித்து டாக்டர் எம். ஏ. பகீரதியின் வழிகாட்டுதலின் படி இசையில் முனைவர் படிப்பும் படித்து வருகிறார்.

இசை வாழ்க்கை

சுற்றுலா

இலாவண்யா இந்தியாவின் முக்கிய சபாக்களில், குறிப்பாக சென்னையில் ஆண்டுதோறும் டிசம்பர் இசை விழாவின் போது இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இவர் அமெரிக்கா, கனடா, இலங்கை மற்றும் பிற இடங்களிலும் பாடல்கள் பாடி இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

இலாவண்யாவின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்

கொள்ளுப் பாட்டி டி. கே. பட்டம்மாள், பாட்டி லலிதா சிவகுமார், தாத்தா ஐ. சிவகுமார், மற்றும் அத்தை நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோருடன் இணைந்து இசை நிகழ்ச்சி.

  • 2008 பெப்ரவரி மாதம் மங்களம் கணபதி அறக்கட்டளைக்கான கருப்பொருள் இசை நிகழ்ச்சி.
  • 2009 இல் அத்தை நித்யஸ்ரீ மகாதேவனுடன் திரிவேணி சங்கமம் மற்றும் வெள்ளித்திரை ராகங்கள் என்ற இசை நிகழ்ச்சிகள்.இந்நிகழ்வில் திரைப்பட பாடல்களும் பாடப்பட்டது.
  • 2010 இல் பாட்டி லலிதா சிவகுமார் மற்றும் அத்தை நித்யஸ்ரீ மகாதேவனுடன் பாட்டி டி.கே.பட்டம்மாளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கர்நாடக இசைக்கான இளைஞர் சங்கத்தின் 25 வது ஆண்டு விழா நிறைவடைந்தது. 
  • 2011 இல் ஜூலை மாதம் மும்பையில் இசை நிகழ்ச்சிகள். 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

இலாவண்யா பல்வேறு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் தோன்றினார்:

  • 2004 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு அன்று ஜெயா தொலைக்காட்சியில் ஒரு சிறப்பான ராகமாளிகா இசை நிகழ்ச்சி.
  • 2009 இல் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு சிறப்பு தீபாவளி நிகழ்ச்சி.
  • 2009 நவம்பர் 2 அன்று, விஜய் தொலைக்காட்சியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியரின் சீசன் கார்த்திகை சிறப்பு நிகழ்ச்சி.
  • 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மக்கள் தொலைக்காட்சியில் தேனமுது இசை நிகழ்ச்சி .  
  • 2015 ஆம் ஆண்டு நவராத்திரி விழாவின் போது ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நவராத்திரி நாயகியார் சிறப்பு இசை நிகழ்ச்சி.

பாடிய பாடல்கள்

இலாவண்யா இந்து பக்தி மற்றும் பிற வகை இசை ஆவணப் பாடல்களைப் பாடியுள்ளார்.

  • ஸ்ரீ சத்ய சாய் சாதனா அறக்கட்டளைக்கு - சாய் லாவண்யா லஹரி (பாடல்), பிரசாந்திநிலையம், புட்டபர்த்தி.
  • கிரி வர்த்தக நிறுவனத்திற்கான - கருணை தெய்வமே (பாடல்).
  • மங்களம் கணபதி அறக்கட்டளைக்கு - மதுரகாளி அம்மன் (பாடல்).
  • கிரி டிரேடிங் ஏஜென்சிக்கு - திரிவேணி சங்கமம் (பாடல்).

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இலாவண்யா_சுந்தரராமன்&oldid=7219" இருந்து மீள்விக்கப்பட்டது