இலங்கை தமிழ் தேசியவாதம் (நூல்)

இலங்கை தமிழ் தேசியவாதம் அதன் ஆரம்பதோற்றம் பற்றியதோர் ஆய்வு (Sri Lankan Tamil nationalism) எனும் நூல் கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய முதலாவது வரலாற்று ஆய்வு நூலாகும். இந்த நூல் தென் ஆசியவியல் மையம், சிட்னியில், 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாகும். இந்நூல் 346 பக்கங்களைக் கொண்டுள்ளது.

இலங்கை தமிழ் தேசியவாதம்
நூல் பெயர்:இலங்கை தமிழ் தேசியவாதம்
ஆசிரியர்(கள்):முருகர் குணசிங்கம்
வகை:வரலாற்று ஆய்வு
துறை:இலங்கைத் தமிழர் வரலாறு
காலம்:2003
இடம்:சிட்னி
மொழி:ஆங்கிலம், தமிழ்
பக்கங்கள்:346
பதிப்பகர்:தென் ஆசியவியல் மையம்
பதிப்பு:2003
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது

நூலின் உள்ளடக்கம்

இந்தியாவில்

இந்தியாவில் நேரு பல்கலைக்கழகத்தில், வாசிப்பு பகுதிக்கு இந்த நூலின் பகுதி இணைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில்

அமெரிக்காவில் கலாநிதி ஆய்வுகளை மேற்கொள்வோரின் சிறந்த ஆய்வுகளை சேகரிக்கும் ஆவணக் களஞ்சியத்திலும் இந்நுலின் உள்ளடக்கங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கையில்

இலங்கையில் இந்த நூல், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள், கல்விமான்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றது. முதல் 500 பதிப்புகள் இலங்கையில் விற்பனையாகி, அடுத்து அனுப்பபட்ட 500 பிரதிகளை இலங்கை பறிமுதல் செய்து தடைவிதித்தது. அவற்றை பின்னரான காலங்களில் இணையத்தின் ஊடாக விற்பனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:நூலகம்:நூல்